உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பல்கலைக்கு ராஜராஜசோழன் பெயர் சூட்ட வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி

தமிழ் பல்கலைக்கு ராஜராஜசோழன் பெயர் சூட்ட வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: உலகபுகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1039வது சதய விழா நேற்று பெரியகோவிலில் மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் துவங்கியது. விழாவில், சதயவிழா குழு தலைவர் செல்வம் வரவேற்றார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.விழா துவக்க உரையாற்றிய சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துஉள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜசோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம். ராஜராஜசோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வந்தார். தஞ்சாவூரை சுற்றிலும் மக்கள் வாழ முக்கிய தேவையான உணவு உற்பத்தியை தொடங்கினார்.ராஜராஜசோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன் நாட்டில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும்; அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்திரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன் ஆட்சியின் கீழ் ராஜராஜன் கொண்டு வந்தார்.தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்திய பின்னர், ராஜராஜசோழன் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது, பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோயில்களை பார்த்துவிட்டு, அதை விட நாம் சிறந்த கோயிலை கட்ட வேண்டும் எனக்கருதி, 1006-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010ம் ஆண்டு முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோவில். இதுபோன்று இறைவனுக்கு மிக பிரமாண்டமான கோவில்களை அமைத்தவர்கள் தான் தமிழ் மன்னர்கள். அதைத்தாண்டி தன் காதலிக்கு கட்டடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல; அப்படிபட்ட மன்னர்கள் தமிழ் மண்ணில் இல்லை.ராஜராஜசோழனின் புகழ் இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு, தமிழக அரசு இன்று அரசு விழா நடத்துவதுடன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு ராஜராஜன் தஞ்சை தமிழ் பல்கலை என தமிழக அரசு பெயர் சூட்ட வேண்டும்.இது ராஜராஜசோழனுக்குசெய்யும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

சதய விழா துவக்க அரங்கில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டம் இல்லாமல் நாற்காலிகள் காலியாக கிடந்தது. இதையடுத்து, விழாவில் பேசிய தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசியதாவது:சதய விழா அழைப்பிதழில் நான்கு முதல் ஐந்து பக்கங்களில் பலரது பெயர்கள் போடப்பட்டு உள்ளன. உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்களின் பெயர் அழைப்பிதழில் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்கள் எல்லாம் வந்திருந்தால் அரங்கம் நிறைந்திருக்கும். நாற்காலிகள் காலியாக இருக்காது.ராஜராஜசோழனின் சதயவிழாவை பெருமையாக பேசுவது மட்டும்போதாது. தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு அரசியல்வாதிகள் எல்லாரும் வர மாட்டார்கள். அரசியல் என்பது சேவை செய்வது.இந்த சேவையை யார் சரியாக செய்கின்றனரோ, அவர்கள் மட்டும் தான் தஞ்சை பெரியகோவிலுக்குள் வர முடியும். தவறு செய்திருந்தால் கொன்று விடுவார். துணை ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா, பெரிய கோவிலுக்கு வந்து சென்ற பிறகு தான் ஜனாதிபதியானார். அதை நினைவில் கொள்ள வேண்டும்.இறை வழிபாடு இருந்தால் தான் நிம்மதி கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். ஆளுங்கட்சி வட்டாரத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி.,க்கள் யாரும் சதய விழாவில் பங்கேற்காத நிலையில், அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

vijay
நவ 11, 2024 09:23

முடியவே முடியாது அய்யா. அது எப்படி மன்னர் பெயர் வைக்கமுடியும்?. தமிழ்நாட்டை வாழவைக்கும், தமிழை வளர்த்து, சமச்சீர் கல்வி முறையால் தமிழக கல்வி தரத்தை உலக ரேஞ்சில் கொண்டுபோன, மக்களின் மனஅழுத்தத்தை போக்க மதுவிலக்கை நீக்கி மதுக்கடைகளை மீண்டும் திறந்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை மதுக்கடைகளினாலேயே உயர்த்திய, முல்லைக்கு தேர் கொடுத்த மன்னர் பாரி போல எறும்புகளின் பசிபோக்க சக்கரையை வாரி வழங்கிய, இருமொழி கல்வி முறையை அரசு பள்ளிகளில் மட்டும் கொண்டுவந்து, ஏழை கழகத்தின் தொண்டர்களின் வாழ்க்கை தரம் உயர அவர்களுக்கு CBSE பள்ளிகளை துவங்க அனுமதி கொடுத்து பணம் சம்பாதிக்க வழிபண்ணிய எங்களது தானைத்தலைவர், தமிழனத்தலைவர் அய்யா கலைஞரின் பெயர்தான் சூட்டவேண்டும், அவரின் பெயர்தான் இருக்கணும்.


சாண்டில்யன்
நவ 10, 2024 14:40

திருப்பதி கோவிலில் சில சோழ மன்னர்களின் மெடீவல் செப்பு சிலைகள் காண்கிறோம் தஞ்சை பெரிய கோயிலில் ராஜா ராஜன் சிலையை வைக்க முடியவில்லை ஆம் ஊருக்கு ஊர் ஆளுக்கு ஆள் ஒரு சட்டம் சம்ப்ரதாயம் சிலை வைக்க நினைத்த கருணாநிதியை மற ராஜராஜ சோழன் சாதனையை நினை ராஜராஜனுக்காக உருகுபவர்கள் ஏதாவது செய்வார்களா உங்க ஆட்சிதான் பேர் வாங்கிக்குங்க பார்க்கலாம் யார் எதை செய்தாலும் காப்பியடிப்பதிலும் அதை திருத்துவதிலும் மல்லுக் கட்டுபவர்களாச்சே


சமூக நல விருப்பி
நவ 10, 2024 13:18

ராஜராஜ சோழ மன்னனை விட நம் அரசியல் வாதிகள் பதவி தான் அவர்களுக்கு பெரியது


ramesh
நவ 10, 2024 12:39

எதுவுமே தேவை இல்லை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒவொவொரு ஜாதிகாரர்களும் தங்கள் மாவட்டத்துக்கும் அரசு பேருந்துக்களுக்கும் தங்கள் இன தலைவர் பெயரை வைக்கவேண்டும் என்று போராடினார்கள். அதனால் தான் அப்போதைய முதல்வர் இனிமேல் தலைவர்கள் பெயரை வைக்க போவதில்லை என்று சொல்லி அணைத்து மாவட்ட பேருந்து மற்றும் மாவட்ட பெயர்களையும் ஒழித்தார் .அதனால் இந்த போராட்டங்கள் ஒழிந்தது


Apposthalan samlin
நவ 10, 2024 11:03

கல்லணை கட்டிய கரிகாலணை பெருமை படுத்தும் விதமாக பெயர் வைக்கலாம் ராஜராஜ சோழன் பெயர் வைக்கிற அளவுக்கு என்ன பன்னினார் ?


சாண்டில்யன்
நவ 10, 2024 10:59

நேற்று காலி நாற்காலிகளுடன் சதய விழா இது, ராஜராஜனுக்கு அவமானம் என்று போட்ட தினமலர் இன்று இந்த செய்திபோட்டு பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளது


சாண்டில்யன்
நவ 10, 2024 10:57

தன் காதலிக்கு கட்டடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல அப்படிபட்ட மன்னர்கள் தமிழ் மண்ணில் இல்லை. மதிப்பிற்குரிய அய்யா பல பிள்ளைகளை பெற்றாளே அதற்க்கு நன்றி சொல்ல செய்த காரியம் அது ஆனாலும் அதுதான் ஏழு உலக திசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது தஞ்சை பெரிய கோயில் ஏனோ அவர்கள் கண்ணில் படவில்லை என்பது சோகம் நிற்க தங்கள் யோசனையை ஆணையாக ஏற்று பெயர் வைக்கலாம் ஆளாளுக்கு அதை தடுத்து போராட மாட்டார்கள் நல்லவேளை தமிழக அரசு அந்த தடங்கலிலிருந்து தப்பியது


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 10, 2024 10:39

விரைவில் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவார் இவர்


தமிழ்வேள்
நவ 10, 2024 10:34

மாஜி எம்எல்ஏ யாருக்கோ மறைமுக எச்சரிக்கை & சாபம் விடுவது தெரிகிறது...


duruvasar
நவ 10, 2024 10:04

கருணாநிதி என நேரிய இடங்களுக்கு பெயர் வைத்தாகி விட்டது எனவே இந்த பல்கலை கழகத்திற்கு ஓங்கோல் முத்துவேல் பல்கலை கழகம் என பெயர் சூட்டலாம்.


ramesh
நவ 10, 2024 12:41

அப்படியே ஒரு கல்வெட்டையும் செதுக்கி வைத்து விட்டு காவல் இருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை