உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி பொதுக்கூட்ட விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்; தமிழக அரசுக்கு உத்தரவு

கட்சி பொதுக்கூட்ட விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்; தமிழக அரசுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27ம் தேதி இரவு தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக கூட்டம் கூடியது, போதிய தண்ணீர், மருத்துவ வசதி இல்லாதது, நீரிழப்பு, குழப்பத்தின் விளைவாக இச்சம்பவம் நடந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6s1c9rs1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து 5 கி.மீ.,துாரத்திற்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊர்வலம், மாநாடு, ரோடு ஷோ நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஒழுங்குபடுத்த, பாதிப்புகளை தடுக்க நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த மனு தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று கூறிய நீதிபதிகள், நெறிமுறைகளை வகுக்க மாநில அரசு தவறினால் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எச்சரித்தனர். அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை நவ.,11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மணிமுருகன்
அக் 27, 2025 23:51

அருமை 10 நாள் என்ன 10 மாதம் கொடுத்தாலும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி கமிஷன் மண்டி தானே காசுக்கு சாராயத்திற்கு பிரொயாணிக்கு கொத்தடிமைகளை அனுப்புவது அதற்காக சம்பந்தப்பட்ட நபர் கட்சி யிடமிருந்து கோடிகணக்கில் பணம்வருவது நின்றுவிட்டால்


V Venkatachalam, Chennai-87
அக் 27, 2025 20:32

வரும் தேர்தலில் நாம் எதிர் கட்சி ஆயிட்டோம்ன்னா இப்போ நம்ம சொல்ற ரூல்ஸ் அப்பறம் நம்மளை பாதிக்ககூடாதுன்னு ரூல்ஸை கவனமா ஃபிரேம் பண்ணுகிறோம். அதுனால டிலே ஆகுது.


Raghavan
அக் 27, 2025 16:07

தங்கள் உத்தரவுப்படி ஒரு சிறப்பு குழுவை இந்த அரசு அமைத்திருக்கிறது. அவர்கள் கேட்டுக்கொண்டபடி 3 மாதம் அவகாசம் கொடுகப்பட்டிருக்கிறது. அந்த குழுவின் பரிந்துரைகளை 3 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம். மேலும் ஒரு சர்வ கட்சி கூட்டம் கூட்டப்போகிறோம். அதில் எடுக்கப்படும் முடிவுகளை அந்த குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்போம். இதே மாதிரி சொல்லி சொல்லி நீதிமன்றங்களுக்கு அல்வா கொடுத்துக்கொண்டே இருக்கும் இந்த விடியா கட்சி.


தத்வமசி
அக் 27, 2025 14:45

பொதுமக்கள் கூடும் நெருக்கமான இடங்களைத் தான் அரசியல்கட்சிகள் தேர்ந்தெடுப்பார்கள். அது தான் அவர்களுக்கு வேண்டும். மார்கெட் பகுதியாக இருந்தால் அல்வா சாப்பிடுவது போலத் தான் இவர்களுக்கு. ஊரைவிட்டுத் தனியான இடத்தில் மாநாடு நடத்துவார்களா என்றால் பிரசாரத்தை கட்டாயம் நடத்த மாட்டார்கள். அதனால் ஊருக்குள்ளே பிரசாரம் நடத்த மைதானம் இருந்தால் அங்கு அனுமதி தரலாம். மக்களுக்குத் தொல்லை இல்லாமல் கல்யாண மண்டபங்களில் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம். மக்கள் ரோட்டை அடைத்து ரோட்டின் இடது பக்கம் அல்லது வலது பக்கம் உள்ள நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் ரோட்டோர கடைகள் போடும் இடங்களில் சிறிய மற்றும் பெரிய கட்சி பொதுக் கூட்டம் போடுவது கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.


duruvasar
அக் 27, 2025 14:30

10 நாட்களுக்கு பிறகு இது பற்றி விசாரித்து தொலைதூர பார்வையுடன் விரிவான அறிக்கை தர ஓய்வு பெட்ரா நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க படவிருக்கிறது மீ லார்ட் என்று பதில் வரும். பல்வேறு துறைகளின் 25 வல்லுனர்கள் அடங்கிய வழிகாட்டு குழு மே 26 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


hariharan
அக் 27, 2025 13:54

பொது நல வழக்கின் கோரிக்கைகள் நியாயமானது. இத்துடன் பல் வேறு நிபந்தனைகள் விதிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கவில்லையென்றால் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கலாம், இல்லையெனில் நிகழ்ச்சி ரத்து செய்ததாக கருத வேண்டும். நிகழ்ச்சிக்காக கட்டவுட்டுகள், பொதுச்சுவர்களில் விளம்பரங்கள் தடை செய்ய வேண்டும். வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், உடல்நிலை குன்றியோர் இவர்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. கட்சிகள் மருத்துவர்கள், செவிலியர்கள் குழு, ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் இவற்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இரவு 9 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். இரவு நேரங்களில் விளக்கு வசதி செய்திடல் வேண்டும். பெரிய கூட்டமாக இருந்தால் மக்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்ல இலவசமாக ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டத்திற்கு தகுந்தாற்போல அரசுக்கு கூட்டம் தொடங்கும் முன்பே கணிசமான காப்புத்தொகை கட்ட வேண்டும். கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தை சுத்தமாக்கும் பொறுப்பு கட்சிகளையே சாரும். நிகழ்ச்சி 2 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லையெனில் காப்புத்தொகையை இழக்கவும், மேற்கொண்டு ஆகும் செலவையும் நிகழ்ச்சி நடத்துபவர்களிடமிருந்து வசூல் செய்யவும் வழிவகை செய்ய வேண்டும். நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக நடத்த கண்டிப்பாக அனுமதி அளிக்கக்கூடாது. ரத்து செய்யப்படும் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட காப்புத்தொகையை நகழ்ச்சி பொருப்பாளர்கள் இழக்க நேரிடும் என கடுமையான நிபந்தனைகளை பாரபட்சமின்றி விதிக்க வேண்டும்.


Rengaraj
அக் 27, 2025 13:39

எந்த அரசியல் கட்சியும் பாரபட்சம் அற்ற முறையில் சரியான விதிகளை வகுக்காது. அப்படியே வகுத்தாலும் இப்போதுள்ள அரசு ஏற்காது. தற்போதுள்ள திமுக அரசுக்கு பிடித்தமாதிரி நெறிமுறைகளை வகுக்க எந்தக்கட்சியாலும் இயலாது. அணைத்து கட்சி கூட்டத்தில் பங்கெடுத்து கட்சி சார்பற்ற முறையில் வகுத்தாலும் மற்ற அரசியல் கட்சிகள் ஒத்துக்கொள்ளாது. மீறி வகுத்தாலும் , ஏதாவது காரணம் சொல்லி நீதிமன்றத்தையே நாடுவார்கள். எனவே நீதிமன்றமே விதிகளை வகுக்கவேண்டும்.


RAMESH KUMAR R V
அக் 27, 2025 12:59

வருங்காலத்தில் கரூர் போல எந்த அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க கடுமையான வழிமுறைகள் தேவை.


Vasan
அக் 27, 2025 14:16

பாட்டிலுக்கு 10 ருபாய் பாட்டு பாடியது தான் காரணம். அவர் அவ்வாறு பாடியிருக்க கூடாது. இது பொது கூட்ட விதிகளில் இடம் பெற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை