உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: ஹிந்துக்களுக்கு எதிராக பேசியதாக வி.சி.க., தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.கடந்த 2020ம் ஆண்டு நடந்த சர்வதேச கருத்தரங்களில் பேசிய திருமாவளவன், ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே, திருமாவளவனுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மனுஸ்மிருதி புத்தகத்தில் இருந்ததையே பேசியதாகவும், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.இதனை ஏற்ற நீதிபதி, திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganapathy Subramanian
ஜன 02, 2025 17:56

அரசு தரப்பில் அவர் சொன்னதில் தவறேதும் இல்லை என்று சொல்லி இருப்பார்கள். அதனை ஏற்று நீதிமன்றம் தன்னுடைய விசுவாசத்தை காட்டி இருக்கிறது. இப்படிபட்ட வழக்குகளில் நீதியரசர் யார் என்பது தெரிந்தால் நமக்கும் அவருடைய கட்சி விஸ்வாசம் தெரிந்து இருக்கும்.


என்றும் இந்தியன்
ஜன 02, 2025 15:49

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு சென்னை தாழ்மையான அநீதிமன்றம் தன் பணியை செய்கின்றது


Nandakumar Naidu.
ஜன 02, 2025 14:29

ஹிந்து விரோதிகளுக்கு துணை போகும் நீதிமன்றங்கள் இருந்தென்ன லாபம். ஹிந்துக்களுக்கு இந்திய நீதிமன்றங்களின் மேல் உள்ள மரியாதையை கெடுத்துக்கொள்ள கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை