மேலும் செய்திகள்
சினிகடலை
15-Dec-2024
சென்னை: 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.சென்னையில் டிச.,12 முதல் 19 வரை தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடந்தது. பி.வி.ஆர்.ராயப்பேட்டை, மைலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்ப்பேட்டை ஆகிய இடங்களிலும் இவ்விழா நடந்தது. இதில் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. விழா நிறைவில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.சிறந்த படம்: அமரன் ( இயக்குநர்- ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம்)சிறந்த இரண்டாவது படம்: லப்பர் பந்து ( இயக்குனர்-தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர்-லக்ஷ்மணன்) இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்சிறந்த நடிகர்- விஜய்சேதுபதி(மஹாராஜா)சிறந்த நடிகை- சாய் பல்லவி(அமரன்)சிறந்த ஒளிப்பதிவு-சாய்(அமரன்)சிறந்த எடிட்டர்-பிலோமின் ராஜ்(மஹாராஜா)சிறந்த ஒலிப்பதிவு -சுரேன் அழகியகூத்தன்(கொட்டுக்காளி)சிறந்த குழந்தை நட்சத்திரம் -பொன்வேல்(வாழை)சிறந்த துணை நடிகர் -தினேஷ்(லப்பர் பந்து)சிறந்த துணை நடிகை- துஷாரா விஜயன்(வேட்டையன்)சிறந்த கதை -நித்திலன் சாமிநாதன்(மஹாராஜா)சிறந்த இசை-ஜி.வி.பிரகாஷ்(அமரன்)சிறந்த கலை இயக்குனர்-மூர்த்தி(தங்கலான்)சமூக பிரச்னைக்கான சிறந்த படம் - இரா சரவணன்(நந்தன்)பேவரிட் நடிகர்- அரவிந்த்சுவாமி(மெய்யழகன்)பேவரிட் நடிகை- அன்னா பென்(கொட்டுக்காளி)அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது-அருள்நிதிசிறந்த பொழுதுபோக்கு படம்-வேட்டையன்குறும்படம்-கயமைஇயக்குனர்-ராஜ்குமார்
15-Dec-2024