உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னை: சென்னை நகை பறிப்பு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறி உள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த செயின் பறிப்பு சம்பவங்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ongzef07&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இரானிய கொள்ளையர்களை பிடித்தது எப்படி, என்கவுன்டர் எப்படி நடந்தது என்பது குறித்து நிருபர்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது; செயின் பறிப்பு சம்பவம் பற்றி எனது கவனத்திற்கு வந்த உடனே நகரம் முழுவதும் அலர்ட் செய்ய சொல்லி சோதனை நடத்த சொன்னோம். இதே போன்ற சம்பவங்கள், தாம்பரம் காவல் கமிஷனரகம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால் வெளிமாநில கொள்ளையர்கள் அதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று எண்ணி, ஏர்போர்ட், ரயில் ஸ்டேஷன், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வாகன நிறுத்தம் பகுதிகளில் சோதனை செய்ய சொன்னோம்.அதுபோல சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது சில குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது. அதை வைத்து சென்னை ஏர்போர்ட்டில் 2 பேரை பிடித்தோம். அவர்கள் கொடுத்த தகவல்படி சென்னை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் இருந்து ஓங்கோல் சென்ற அவனை ரயில்வே போலீஸ் உதவியுடன் பிடித்தோம். 3 குற்றவாளிகளை பிடித்து நடந்த செயின்பறிப்பு சம்பவங்களில் பறிகொடுக்கப்பட்ட அத்தனை நகைகளையும் மீட்டுள்ளோம். சி.சி.டி.வி., காட்சிகளில் குற்றவாளிகள் ஓரளவுக்கு அடையாளம் தெரிந்தது. அதை ஏர்போர்ட்டில் உள்ள அதிகாரிகளுக்குச் சொல்லி சந்தேக நபர்கள் யாராவது கடைசி நிமிடத்தில் டிக்கெட் எடுத்து எங்கேயாவது போக முயற்சிக்கிறார்களா என்று கண்காணித்தோம். அதன் பின்னர், கிடைத்த தகவல்படி ஹைதராபாத் செல்லக்கூடிய ஒரு விமானத்தின் உள்ளே அந்த குற்றவாளி இருந்தான். உள்ளே உட்கார்ந்திருந்த அவனை, விமான நிறுவன அதிகாரிகளிடம் கூறி, அங்கேயே சென்று பிடித்தோம். 3 பேரும் இரானிய கொள்ளையர்கள். குற்றம் நடந்த 3 மணிநேரத்தில் பிடித்து விட்டோம். இவர்கள் மும்பை, கிழக்கு தானே, பிதார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். நிறைய இடங்களில் இவர்கள் இருந்தாலும் அவர்கள் அதிகம் இருப்பது மும்பையில்தான். குற்றச்செயலில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட பைக்கை எடுக்க போகும்போது குற்றவாளி போலீசை தாக்கி தப்பிக்க பார்த்துள்ளான். அப்போது தான் என்கவுன்டர் நடந்தது. அந்த பைக்கில் குற்றவாளி துப்பாக்கி வைத்திருந்தான். இதுவரைக்கும் வந்த தகவல்களின் படி, மும்பை போலீசிடம் தகவல் பெற்றுள்ளோம். 50க்கும் மேற்பட்ட வழக்குகள் குற்றவாளி மீது இருப்பதாக அங்குள்ள ஊடகங்களில் வந்திருக்கிறது. தமிழக காவல்நிலையங்களில் அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். 3 பேரில் ஒருத்தன் சம்பவத்தை அரங்கேற்றும் முன்னதாக சில ஏற்பாடுகளை செய்கிறான். அவர்கள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்தது. அது திருடப்பட்டதா அல்லது அங்கேயே வாங்கப்பட்டதா என சோதனை செய்து வருகிறோம். 2 பேர்களும் சம்பவம் நடக்கும் அன்றைய தினம் நள்ளிரவில் ஏர்போர்ட்டில் இறங்கி வருகின்றனர். அவர்களுக்காக ஏர்போர்ட்டில் 3வது குற்றவாளி வைத்திருக்கிற பைக்கை எடுத்துக் கொண்டு போகிறார்கள். இவர்கள் இந்தியாவில் எல்லா இடத்திலும் இயங்கக்கூடிய கிரிமினல் கும்பல். இவ்வாறு அருண் கூறினார்.ஈரான் நாட்டை பூர்விகமாக கொண்ட இந்த கும்பல், இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வசிக்கின்றனர். திருடுதல், கொள்ளையடித்தலே இவர்களது முக்கிய வேலை என்று போலீசார் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Jaya
மார் 28, 2025 10:35

மக்கள் யாவரும் தங்கமாக வைத்து கொள்ளாமல் தங்க பாத்திரங்களாக வைத்துக் கொள்ளவும். வசதியான மக்கள் ஆபரணங்கள் ஆக வைத்து கொள்ளட்டும். பெண்ணுக்கு கல்யாணம் செய்தாலும் பரிசாக தங்கப் பத்திரமாக வழங்கவும். அப்போது தான் தப்பிக்க முடியும்.


நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 21:18

அவர்களின் பெயரை அருண் மறந்து விட்டாரா ?


Ramesh Sargam
மார் 26, 2025 21:49

இரானிய கொள்ளையர்களை சுட்டு பிடிக்கிறீங்க. ஆனால் தமிழக கொள்ளையர்களை பிடிக்கமுடியவில்லை. ஏன்? திமுக அரசியல்வாதிகள் குறுக்கீடா?


ஜெய்ஹிந்த்புரம்
மார் 26, 2025 19:24

இந்திக்காரன் இப்போ இரானியன் ஆயிட்டான்...தமிழ்நாடு போலீஸ் அந்நியன் ஆகி ஆப்பு வைத்து விட்டது.


ஜெய்ஹிந்த்புரம்
மார் 26, 2025 19:19

ஒருத்தனுக்கு பதில், ரெண்டு பேரை என்கவுண்டர் பண்ணியிருக்கணும். கொள்ளையடித்தவர்களின் ஒருவனை, அப்புறம் அவர்களை இங்கு அனுப்பி ஒரு பயமான சூழல் உள்ளதாக டகால்டி செய்யும் தலைவனை. முச்சந்தியில் வைத்து போட்டு தள்ளனும்.. தமிழ்நாடுடா, சும்மா அதிருதுல்லே.


sankaranarayanan
மார் 26, 2025 19:05

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஓங்கோல் சென்ற அவனை ரயில்வே போலீஸ் உதவியுடன் பிடித்தோம். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. எதற்காக இவர்கள் ஓங்கோல் செல்ல வேண்டும்.ஓங்கோல் எதற்கோ பெயர் போனதே!இந்த செயலும் அங்கேதான் அரங்கேறுகிறதா அந்தகோ பாவம்...


sethu
மார் 26, 2025 17:55

ஆபிசர் உங்கள் மீது சவுக்கு சங்கர் கூறிய குற்றசாட்டை சுலபமாக திசை திருப்பி விடடீர்களா ? நல்லது .


என்றும் இந்தியன்
மார் 26, 2025 17:53

திராவிட மாடல் உலகம் பூராவும் என்று ஸ்டாலின் சொன்னது இதைத்தான்


raja
மார் 26, 2025 17:40

ஈரானிய தொப்புள் கொடி உறவுகள் ... புரிந்ததா தமிழா...திராவிடநின் கைங்கர்யம் தான்....


Rajathi Rajan
மார் 26, 2025 17:01

ஓர் அதிகாலையில் அடுத்தடுத்து எட்டு தங்கச் சங்கிலி அறுப்புகள் நடைபெறும், அதுவும் அது முதிய பெண்களிடம் நடக்கும் என்பது எவ்வளவு பேரவலம் ? தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை எந்த வழியிலேனும் எவனை வைத்தேனும் கெடுத்துவிட வேண்டும், தினமொரு சேதி பொதுமக்களிடையே இதுபோல் பரவி, திமுக ஆட்சி மீது ஓர் அச்சவுணர்வை நிரந்தரமாகத் தோன்றச் செய்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் சதி புரிந்தாலொழிய இது சாத்தியமாகாது நேற்று காலையில் நடந்த இந்தச் சம்பவங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததற்கு கயவர்கள் உடனடியாக பிடிபட்டதுதான் இல்லாவிடில் ?அப்போது இந்த நகைபறிப்பு சம்பவங்கள் இந்தியளவில் வைரல் ஆக்கப்பட்டிருக்கும். இன்று தங்கம் விற்கும் விலைக்கு பெண்களிடையே சட்ட ஒழுங்கு பற்றிய முணுமுணுப்பு பலமாக எழுந்திருக்கும். அதைத்தான் இத்தகைய கயவர்களை இங்கு இறக்குமதி செய்த சதிகாரர்களின் பேராசை. இவர்களுடைய நெட்வொர்க் அபாரமானது. இவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிடத்தில் இவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காட பல வழக்கறிஞர்கள் தயாராக நின்றதைப் பார்த்து காவல்துறையே நடுங்கிப் போயிருக்கிறது, உடனே வடக்கர்கள் எல்லாம் இப்ப இப்பதாம்பா இங்கிட்டு கொள்ளையடிக்க கூட்டம் கூட்டமா வாராய்ங்க என்று பூமர்ஸ் போல புலம்ப வேண்டாம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புறநகர்களில் தனித்திருக்கும் வீடுகளை குறிபார்த்து கொள்ளையிடும் வடக்கர்கள் கூட்டம் ஓர் ஆளுங்கட்சி எம் எல் ஏவையே கொன்று போட்டு கொள்ளையிட்டது. ஜாங்கிட் அவர்களைப் போராடிக் கைது செய்த கதைதான் தீரன் அதிகாரம் ஒன்று, அது 2005. வேளச்சேரி வங்கிகளில் அடுத்தடுத்து பட்டப்பகலில் முகமூடிக் கொள்ளைகள் நடைபெற்றன. கொள்ளையர்கள் புறநகரில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி இதைப் பெரிதாக நடத்தவிருந்த நிலையில் போலிஸ் சுற்றி வளைத்தது. முதலில் அவர்களைக் கைதுதான் செய்திருக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால் என்ன நடக்கும் என உணர்ந்த அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் என்கவுண்டருக்கான அவசியத்தைச் சொல்ல ஐந்து பேரை அவர்கள் கதறக் கதற சுட்டுக் கொன்றனர். இது 2012.அவர்கள் இனி தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டோம் என அரைகுறைத் தமிழில் கதறியதை சுற்றியிருந்தவர்கள் கேட்டிருக்கின்றனர். அதன்பின், வடக்கில் உ.பியிலோ, பீகாரிலோ, ம.பியிலோ, ராஜஸ்தானிலோ நடப்பதைப் போன்ற பகிரங்கக் கொள்ளைகள் அரிதாகவே நிகழும். நேற்று நடந்தது திட்டமிட்ட பயங்கரம் இனி காவல்துறையினரை தூங்கவிட மாட்டோம் என ஆட்டுப்புழுக்கை அறைக்கூவல் விடுத்ததைப் பார்த்தால் ? முன்னாள் காவல்துறை ஆள் என்பதால் ஜெயிலர் படக் கதை போல அத்தனை அக்யூஸ்ட் டீட்டைலும் அவரிடம் இருக்கும் என்பது என் சந்தேகம். இதைவிட கொள்ளையர்கள் வாழும் மாநிலங்கள் இப்போது அவர்களுடைய கைகளுள் இருப்பதால் எதையும் எங்கும் அரங்கேற்றத் துணிவார்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு Acid Test தான். சட்டம் ஒழுங்கை தொடர்ந்து சீரழிக்க, மதக்கலவரம் வரை துணிவார்கள். காவிச் சங்கிகளுக்கு உதவத்தான் நீலச்சங்கிகளும், பச்சைச்சங்கிகளும் தயாராக இருக்கிறார்கள் அல்லவா ? எனவே நம் அருகிலிருக்கும் சங்கி மனோபாவ ஆட்களிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள். நேரடி எதிரிகளை விட முதுகில் குத்தும் துரோகிகள் பேராபத்தானவர்கள், அவர்களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள் 2026 -ல் தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டாட்சிதான் என்று அமித்ஷா வேறு நேற்று சூளுரைத்திருக்கிறார். குஜராத்தை தக்கவைக்க, ம.பியைத் தக்கவைக்க, மகராஷ்டிராவைத் தக்கவைக்க, உ.பியைத் தக்கவைக்க, பீகாரைத் தக்கவைக்க, மணிப்பூரைத் தக்கவைக்க, திரிபுராவைத் தக்கவைக்க, டெல்லியை மீட்க அவர்கள் என்னவெல்லாம் சதி புரிந்தனர் என்பது உள்ளங்கை கிரிணிப்பழம். எதிரியை வெல்ல எந்த பின்புற வழியாகினும் அதைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் கற்றுக் கொடுத்திருக்கிறது. வாலியை மறைந்திருந்துக் கொன்றாலும் அது வீரம் தான், மனைவியைச் சந்தேகப்பட்டாலும் அவன் ஆண்மகன்தான், அசுவத்தாமன் இறந்துவிட்டான் எனப் புரளி கிளப்பி வீரனை முடக்கினால் அது இராஜதந்திரம், தர்மம்தான் அவன் தலைக்காக்கிறதென்றால் அந்த தர்மப் பலன்களையேத் தானமாக பெற்றுக் கொல் என்பதுதான் கீதை. எனவே பாவம் செய்ய அவனுக்கு கடவுளே துணை நிற்கும் என நம்புவான். அவனை நீங்கள் ஒருபோதும் திருத்த முடியாது. ஆனால் அவனை அண்டவிடாமல் செய்ய முடியும். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது சங்கிகளுக்கும், சங்கி சகவாசம் கொண்டோருக்குமான முதுமொழி


Mahalingam
மார் 26, 2025 17:29

வெளி மாநில கொள்ளையர்கள் வந்தால் குமுறி எழும் நெஞ்சம் ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு ஜால்ரா போடும் விந்தை தான் புரியவில்லை


simha
மார் 26, 2025 21:26

ஆம். இங்கு பிடிபடாமல் ஒங்கோல் சென்றுவிட்டால் விஞ்ஞான திருடு நிரூபிக்க முடியாது.


Ganesun Iyer
மார் 27, 2025 02:47

கிலோ மீட்டர் கணக்கில் முட்டு குடுத்து எழுதினாலும் கிடைக்கிறது என்னவோ ரூ.200/-..பாவம்.


முக்கிய வீடியோ