உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு சாம்பியனின் சாதனை! குகேஷின் ரூ.4 கோடி வரியை விட தோனியின் சம்பளம் குறைவு!

ஒரு சாம்பியனின் சாதனை! குகேஷின் ரூ.4 கோடி வரியை விட தோனியின் சம்பளம் குறைவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக செஸ் சாம்பியன் குகேஷ், தாம் பெற்ற பரிசுத் தொகைக்காக செலுத்திய வரி, தோனியின் ஐ.பி.எல்., சம்பளத்தை விட அதிகமாக உள்ளது.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.சாதனை நாயகன் குகேஷுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குகேஷை பாராட்டி ரூ.5 கோடி ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்து கவுரவித்துள்ளது.இந்நிலையில், சாம்பியன்ஷிப் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தொகைக்கு அவர் செலுத்த வேண்டிய வரி ரூ.4.67 கோடியாகும். அதாவது ஐ.பி.எல்., சீசனின் நடப்பு தொடரில் தோனியின் சம்பளத்தை விட அதிகமாகும். தோனியின் சம்பளம் ரூ.4. கோடியாகும். ஆனால் அதை விட குகேஷுக்கு வரி அதிகம்.பொதுவாக, ரூ.5 கோடிக்கும் அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு 37 சதவீதம் கூடுதல் கட்டணம், 4 சதவீதம் சுகாதாரம் மற்றும் கல்வி வரி என மொத்தமாக 42 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

R Dhasarathan
டிச 24, 2024 06:31

அரசு விளையாட்டு துறையின் அவசியத்தை உணர்ந்து வெற்றியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வரி சலுகைகளை அறிவிக்க வேண்டும். கடின உழைப்பால் வெற்றி பெறும் இவர்களை மற்றவர்களிடம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.


Arumugam K
டிச 21, 2024 10:38

டான்t அஸ்க் அகைன்ஸ்ட் rules


Arumugam K
டிச 21, 2024 10:36

நோ எனி கமெண்ட்ஸ் அகைன்ஸ்ட் கோவேர்ந்மேன்ட் இரண்ட rules


M MANICK
டிச 18, 2024 08:35

ஜெய் இந்தியா


Arul
டிச 17, 2024 21:01

அமெரிக்காவில் 24% வரி முதலில் விதிக்கப்படும் . பின்னர் மீதமுள்ள பணத்தில் ரெகுலர் வரி விதிக்கப்படும். ரெகுலர் வரி என்பது இன்னோர் 20 இருந்து 30% ஆகும் . உலகத்தில் எங்கு இருந்தாலும் வரி கட்ட வேண்டும்.


prabakaran J
டிச 17, 2024 18:46

TN gov equalizes this tax amount...


Kasimani Baskaran
டிச 17, 2024 16:31

இதென்ன பிரமாதம்.. தமிழக மன்னர் குடும்பம் ஒரு நாளுக்கு டிபன் சாப்பிட இதை விட அதிகம் செலவு செய்கிறார்கள்.


S Ramkumar
டிச 17, 2024 15:42

ஜி எல்லாரும் வரி கட்ட வேண்டும். ரவி சாஸ்திரி சாம்பியன் பட்டம் வென்ற காரை எடுத்த்து கொண்டு வந்த பொது கூட வரி காட்டினார்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 17, 2024 14:55

நடிகர் விஜய் சுங்கவரி கட்டவில்லை என்று ஒப்பாரி வைத்தவர்கள்....முகேஷ் விஷயத்தில் வரி ஏன் கட்டவேண்டும் என்று கூறுகிறார்கள்....யாருப்பா நீங்க எல்லாம்


Chola
டிச 17, 2024 14:14

Let him pay the tax. no issues here.. Everyone must be equal in the country


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை