தேவர் ஜெயந்தி முதல்வர் பங்கேற்பு
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் முதல்வர் செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து பசும்பொன்னுக்கு ஹெலிகாப்டரில் செல்லவுள்ளார். இதற்காக, பசும்பொன்னில் ‘ஹெலிபேட்’ அமைக்கப்படுகிறது.