உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி கொண்டு இருக்கிறார் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.திருப்பூரில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பார்லிமென்டில் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்ய போவது கிடையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஒருத்தருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது கணக்கு கிடையாது. புதிய மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை தீர்மானிக்க போவது கிடையாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0a1xj5yo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எத்தனை தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் எந்த கூட்டணியும் இதுவரை முழுமை அடையவில்லை. பா.ஜ.,- த.வெ.க., மாறுபட்ட நிலைப்பாடு கொண்டது. ஏ டீம், பிடீம் என்பது மக்களை குழப்பும் வேலை. கள் இறக்க தடை நீக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மத்திய அரசின் திட்டங்களை வரவேற்க வேண்டும்; நிதிப்பங்கீடை வைத்து முதல்வர் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு 100 சதவீத நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் பற்றி முதல்வர் பேசுவதில்லை. 4 ஆண்டு ஆட்சிக் காலத்தின் ரிப்போர்ட் கார்டை முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

என்னத்த சொல்ல
ஜூன் 16, 2025 22:36

அண்ணாமலை வட இந்திய பிஜேபி தலைவர்கள் என்ன சொல்றாங்கன்னு தெரியல போல. கொஞ்சம் TV யை ஆன் பண்ணுங்க ஜி.


Vel1954 Palani
ஜூன் 16, 2025 20:49

வடநாட்டு வந்தேறிகள் கீழ் அடித்தட்டு முதல் மேல் அடித்தட்டு வரை தமிழகத்தில் தொட்டி பட்டி எல்லாம் புகுந்து தமிழ் தொழிலாளிகளுக்கு எதிராக குறைந்த கூலியில் வேலை செய்கிறார்கள். இப்படியே போனால் தமிழகதில் குட்டி பீகார் தோன்ற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு தேர்வு மூலம் நிறைய இந்தி காரன் தமிழகத்துக்கு வேலைக்கு வருகிறான் . வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்று தமிழனைப்போல் தமிழ் பேசுகிறான். மார்வாடிக்கு தமிழ் தாய்மொழி ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம் இந்தி இனி ஒலிக்கும். வீணாக வாய் சொல்லில் வீரராக இருக்க வேண்டியதுதான் . .


Vel1954 Palani
ஜூன் 16, 2025 20:25

மின்சாரம் ரீடிங் மாதம் ஒருமுறை கணக்கெடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு . பல கோடி மக்கள் இதனால் பாதிக்கிறார்கள் . இது தில்லுமுல்லு திராவிட மாடல் பொய் வாக்குறுதி இல்லையா ?


vivek
ஜூன் 16, 2025 15:26

அண்ணாமலை பேரை கேட்டாலே கொத்தடிமைகளுக்கு சும்மா அள்ளிவிடுது...... சேம காமெடி


ஜூன் 16, 2025 16:48

அப்புறம் சட்டடையை கிழிச்சுகிட்டு கிளம்பிடுவார் ஜாக்கிரதை ... ஆக ஆக ... பூனைமேல் மதில் என்றெல்லாம் ஆரம்பித்தால் தாங்குவீர்களா ..ஜாக்கிரதை


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 14:31

இன்னிக்கி நியூஸ் பாக்கலையா? அதை பீகாரில் உள்ள பாஜக கட்சியிடம் போய் சொல்லுங்கள் அண்ணாமலையாரே. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதிகள் வேண்டும் என்பது அவர்கள் தான். மேலும் பல வடமாநில பாஜக கட்சி சார்ந்தவர்கள் தான். இவர்களே குண்டு வைப்பார்களாம்... பிறகு அவர்களே எடுப்பார்களாம். என்னடா கலர் கலரா ரீல் விடுறீங்க... ?


ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 15:00

திமுக கூட்டாளி லாலுவுக்கு 9 வாரிசுகள். எல்லாம் நாட்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலானதற்குப் பிறகு பிறந்தவர்கள். அவரிடம் கருத்து கேளுங்கள்.


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 14:28

விஜய் கட்சி வாங்கும் வாக்குளை கூட தமிழ்நாட்டில் பாஜக கட்சி வாங்காது என்பதே உண்மை.


Arjun
ஜூன் 16, 2025 16:37

அதை பாஜக பார்த்துகொள்ளும் உங்கள் கட்சிஎவ்வளவு சீட்டை ஓட்டைபணம் கொடுத்து வாங்கும் அதைபற்றி கவலை கொள்ளுங்கள்


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 14:25

மாப்பிளை அவரு தான் ஆனால் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்பது போல தமிழ்நாட்டு பாஜக கட்சியில் நடக்கிறது. யாரு தான் தலைவர்ன்னு தெரியல. கொடுமை கொடுமை.


Priyan
ஜூன் 16, 2025 14:21

முதல்வர் சொல்வது ஒன்றும் கற்பனை அல்ல, உள்துறை அமைச்சர் தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு இருக்காது என தெளிவாக பதில் அளிக்க வில்லை. தமிழ் நாட்டின் எண்ணிக்கை குறையாது என்பது கொஞ்சம் மழுப்பும் பதில். தொகுதி தற்போதுள்ள சதவீத அடிப்படையில் நடை முறைக்கு வந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் உதாரணமாக தற்போதுள்ள எண்ணிக்கை 750 ஆக மாறினால் சதவீத அடிப்படையில் தமிழ் நாட்டின் எண்ணிக்கை 54 ஆகவும், உத்தர பிரதேசத்தின் எண்ணிக்கை 125 ஆகவும் மாற்ற பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் போனால் நமது எண்ணிக்கை 45 ஆகவும் உத்தர பிரதேசத்தின் எண்ணிக்கை 150 ஆகவும் மாறும். தமிழ் நாட்டின் உரிமை சம்பந்த பட்ட விவகாரத்தில் தமிழ் நாட்டு பாஜக தமிழ் நாடு மக்களின் பக்கம் நிற்காமல் அவர்கள் டெல்லி தலைமையின் விருப்பப்படி செயல் பட்டால் பாஜக தனிமை படுத்த படுவார்கள். தேர்தல் வாக்குறுதியை பொறுத்த வரை ஒன்றிய அரசை செயல் படுத்தியதை விட அதிக வாக்குறுதிகளை தமிழ் நாட்டு அரசு அதிகம் நிறைவேற்றியுள்ளது.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 15:03

எம்பி க்க‌ள் அதிகமாவதால் ஒரு பலனுமில்லை.. முக்கால்வாசி திராவிட எம்பி களுக்கு பார்லிமெண்டில் விவாதம் செய்யுமளவுக்கு விஷய ஞானம் கிடையாது. என்ன நடக்கிறது என்பதே புரியாமல் திருதிரு ன்னு முழிக்கும் எம்பி க்கள் அதிகம்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 16:37

இந்தி வந்தால் தமிழ் ஒழிந்துவிடும் என்று 1960 களில் உருட்டினார்கள் ...இந்திவந்ததால் மலையாளம் அழியவில்லை , தெலுங்கு அழியவில்லை , கன்னடம் அழியவில்லை , பஞ்சாபி அழியவில்லை , குஜராத்தி மொழி அழியவில்லை தமிழ் மட்டும் அழியும் என்ற உருட்டு போல் தான் இதுவும் ,,நீட் உருட்டு ஊத்திக்கிச்சு ..


J.Isaac
ஜூன் 16, 2025 19:47

பக்கிரி, வடநாட்டவர் கேரளாவில் தொழில் செய்கிறார்களா ?


Venkatesan Srinivasan
ஜூன் 16, 2025 23:06

ஏதோ ஒரு வகையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறுபடும். மக்கள் தொகை மாறுவதற்கு ஏற்ப. எந்த மாநில பூர்வீக மக்களும் அவர்கள் வசிப்பிடம் கொண்டு அந்த தொகுதி வாக்காளர்களாக மாற்றம் அடையும் போது நம் தமிழ் நாட்டில் வட இந்தியர்கள் கணிசமான வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது. நாம் உபி, பீகார் கண்டு அதிர்ச்சி கொள்ள தேவையில்லை. தேவைப்பட்டால் தமிழர்கள் அந்த மாநிலங்களில் குடியேறி அங்கு அரசியல் நிலைமை நிர்ணயம் செய்வார்கள். கண்டிப்பாக மக்கள் தொகை அடிப்படையும் ஒரு காரணியாக தொகுதி மறு வரையறைக்கு அமையும். ஆகவே தமிழக ஆட்சியாளர்கள் தம் பெரும்பான்மை நிலை தக்க வைக்க பிற மாநில மக்களை கண்டிப்பாக இந்தியர்கள் மட்டுமே குடியேற ஊக்குவிக்கும் நிலை உருவாகும். மக்கள் தொகை அதிகரிக்க உடனடி தீர்வாக பிள்ளை பிறப்பு அதிகரிப்பு முயற்சிகள் பலன் தராது.


Barakat Ali
ஜூன் 16, 2025 14:10

இதுலேர்ந்தே தெரியுது அண்ணாமலை பொய் சொல்றார்ன்னு ....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 16:38

உங்கள் நீட் உருட்டுக்குமுன்னால் அண்ணாமலை உருட்டு செல்லாது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 16:43

கழகத்தினர் போல் பொய் சொல்ல இனியொருவன் பிறந்து வரவேண்டும் ...ரூபாய்க்கு மூனுப்படி அரிசி முதல் , நீட் தேர்வு ரத்து வரை போகும்


J.Isaac
ஜூன் 16, 2025 17:54

பக்கிரி, பக்கி மாதிரி எழுத கூடாது. உண்மையான பெயர் என்ன? ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் ?


babu
ஜூன் 16, 2025 14:02

யார் இவர்?? என்ன பதவியில் இருக்குறாரு??


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 14:45

இப்போதும் இவரு தான் பாஜக தலைவர்ன்னு அவருக்கு நினைப்பு... நயினார் நாகேந்திரன் அப்போ டம்மி தான் போல.


vivek
ஜூன் 16, 2025 15:13

இதோ வந்துட்டார் கோமா பாபு


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 16:41

கேள்வி கேட்க பதில் சொல்ல எந்த பதவியிலும் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை .. கருணாநிதி அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லியது உங்களுக்கு தெரியுமா ? ...


சமீபத்திய செய்தி