உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19 திட்ட பணிகள் முதல்வர் துவக்கி வைத்தார்

19 திட்ட பணிகள் முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை:நீர்வளத் துறை சார்பில், எட்டு மாவட்டங்களில், 83.19 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ள, 19 திட்டப் பணிகளை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, 11.12 கோடி ரூபாயிலும், மாம்பாடி -புங்கந்துறை அருகே, 11.56 கோடி ரூபாயிலும், அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் கொளப்பாக்கத்தில், 11.72 கோடி ரூபாயில் கால்வாய்; வாலாஜாபாத் உள்ளாவூர் அருகே தொள்ளாழிமடுவின் குறுக்கே 7 கோடி ரூபாயில் அணைக்கட்டு; உத்திரமேரூர், இருமரம் கிராமம், புத்தளிமடு குறுக்கே 3.06 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளன.இவை தவிர, திருநெல்வேலி, திண்டுக்கல், பெரம்பலுார், துாத்துக்குடி, திருச்சி மாவட்டங்களில், மொத்தம் 83.19 கோடி ரூபாயில், 19 திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் முருகானந்தம், நீர்வளத் துறை செயலர் மணிவாசன், தலைமை பொறியாளர் மன்மதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை