உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்மா உணவகங்களில் இலவச உணவு, மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவு

அம்மா உணவகங்களில் இலவச உணவு, மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று (நவ.,30) முழுவதும் இலவசமாக உணவு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். துணையாக அரசு இருக்கிறது. மாமன்ற உறுப்பினர்களை களத்தில் இருந்து, பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். புயலை எதிர்கொள்ள அரசும், மாநகராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hrsrex25&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மழைக்காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்கள் அனைத்தும் வசதிகளுடன் தயாராக இருக்க வேண்டும். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் இன்றும் முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். கடற்கரைக்கு புயலை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தமிழ்வேள்
நவ 30, 2024 18:34

கள்ள கணக்கு எழுதி காசு பார்க்கும் வழி.. பத்து பேருக்கு சோறு போட்டு விட்டு ஐந்நூறு பேருக்கு போட்டதாக கணக்கு எழுத வேண்டியதுதான்.. இதற்கு ஆடிட். எதுவும் கிடையாது.. அப்புறம் என்ன? .


Ramkumar Chandrasekaran
நவ 30, 2024 18:23

Good decision to give free food. The govt can extend it to another 2days


பேசும் தமிழன்
நவ 30, 2024 16:10

4000 கோடி பணம் எங்கே போனது ???


raja
நவ 30, 2024 16:07

வாழ்த்துக்கள் ....மாடல் அரசுக்கு வாழ்த்துக்கள்...சென்னை துறைபாக்கத்திலிருந்து திருவான்மியூர் வரை கடலை விரிவுபடுத்தி ஆழ்படுத்தி கட்டுமர நினைவு விடியல் துறைமுகம் அமைத்து மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாடல் அரசுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...


raja
நவ 30, 2024 15:38

4000 கோடி ரூபாயை ஆட்டையை போட்டு சென்னை முழுவதும் நீச்சல் குளம் மற்றும் கட்டுமர நினைவு விடியல் துறைமுகம் அமைத்த மாடல் அரசை எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதே


Indian
நவ 30, 2024 16:14

எவ்வளவு தான் நல்லது செய்தாலும் , குறை சொல்லாம உன்னால இருக்க முடியாதே .


raja
நவ 30, 2024 18:14

சொத்துவரி எத்துணது நல்லதா...குப்பை வரி குடிநீர் வரி எத்துணது நல்லதா...மின் கட்டணம் எத்துணது நல்லதா... நாளை எரபொகும் ஆவின் பால் விலை பால் பொருள்களின் விலை நல்லதா... காய்கறிகளின் விலை ஏற்றம் மளிகை பொருள் களின் விலை ஏற்றம் செய்து கொள்ளை அடிகிரார்களே அது நல்லதா..கஞ்சா, போதை பொருட்கள் தங்கம் கடத்தும் கேந்திரமாக தமிழகத்தை மாற்றியது நல்லதா...நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கா இது நல்லதா...தமிழகம் முழுவதும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதே இதுவா நல்லது.. லஞ்சம் வாங்கிய கைதான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்கிரார்களே இது நல்லதா...பொங்கல் தொகுப்பில் 500 கோடி, வந்த ஆறே மாதத்தில் 30000 கோடி கொள்ளை அடித்தது இதோ இப்போ 4000 கோடி கொள்ளை அடித்து உத்தமன் வேசம் போடுறாங்களே இது நல்லதா... பாட்டிலுக்கு 10 ருவா அதிகம் வாங்கி குடிமகன்களின் கோவணத்தை கூட உருவுறாங்களே இது நல்லதா... கணிமவளங்கலை கொள்ளை அடித்து கேரளாவுக்கு கடத்தி காசு பாக்குறாநுவோலே இது நல்லதா ... சொல்லு கொத்தடிமையே இதில் எது நல்லதுன்னு சொல்ற...


Devanand Louis
நவ 30, 2024 14:42

அம்மா உணவகங்களையெல்லாம் மூடுவிழா நடத்திய திராவிட மாடல் ஊழல் அரசு இப்பொழுது அம்மா உணவகங்கள்மீது பார்வை


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 15:41

எந்த அம்மா உணவகம் எப்போ மூடப்பட்டது? காலைல எழுந்து, ஆதாரமே இல்லாமல் பொய்களைப் பதிவிட வேண்டியது. இதனால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?


Barakat Ali
நவ 30, 2024 16:15

பொறுப்பற்ற ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் கிடைக்கிறது ....


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 30, 2024 17:30

அய்யா வைகுண்டம், திமுக அரசு பதவியேற்றதும் முதலில் செய்த வேலையே அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கியதுதான். இன்னமும் சந்தேகம் இருந்தால் பழைய தினமலர் ஏடுகளை எடுத்துப் பார்க்கவும்


சமீபத்திய செய்தி