உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரவையில் மாற்றமா? எனக்கு தகவல் வரவில்லை என ஸ்டாலின் பதில்

அமைச்சரவையில் மாற்றமா? எனக்கு தகவல் வரவில்லை என ஸ்டாலின் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சரவையில் மாற்றம் என தகவல் வருகிறதே என்ற நிருபர்கள் கேள்விக்கு, 'எனக்கு தகவல் வரவில்லை' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும், இன்று (ஆகஸ்ட் 22) மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. அமைச்சரவையில் 3 புதியவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்றும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம் என்றும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஸ்டாலின் பதில்

இது தொடர்பாக, இன்று செய்தியாளர்கள், முதல்வர் ஸ்டாலினிடமே கேட்டனர். 'அமைச்சரவையில் மாற்றம் என தகவல் வருகிறதே' என்ற நிருபர் கேள்விக்கு, 'எனக்கு தகவல் வரவில்லை' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். மேலும் அவர், ' நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசின் விழா; அதை மாநில அரசு நடத்தியது. அமெரிக்காவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு உள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு, திரும்பிய பிறகு அதன் முடிவுகளை கூறுகிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mr Krish Tamilnadu
ஆக 22, 2024 23:14

துணை முதல்வர் கூறினார். துணை பதவியில் உள்ளவர்கள் தானே ஆக்டிவ் வா இருப்பாங்க. ஆனா உங்க கிட்ட பரிமிஷன் வாங்கி இருக்கணுமே. ஒ.. இன்னும் பதவியே ஏற்கலையா? செங்கல் வைத்து பிரச்சாரம் செய்தது போல், திறக்காத எய்ம்ஸ் மருத்துவமனை வைத்து அடுத்த தேர்தலா பிரச்சாரம் செய்யட்டும். அதுவரை அமைதி காக்கவும் என பளிச்சுன்னு சொல்ல வேண்டியது தானே.


அப்புசாமி
ஆக 22, 2024 21:59

அமெரிக்கா போனால் சுத்தமா ஒண்ணும் தகவல் தெரியாம போயிடும்.


Ramesh Sargam
ஆக 22, 2024 20:12

ஒருவேளை ஸ்டாலின் அவர்களுக்கே தெரியாமல், அவர் மகன் உதய நிதி, மறைமுக ஆட்சி shadow governance செய்கிறாரோ...? இருக்கலாம். இந்தக்காலத்தில் தாலிகட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் கூட நம்பமுடியவில்லை.


sridhar
ஆக 22, 2024 18:58

நகைச்சுவையாம் , சிரித்து தொலைங்க ..


Anand
ஆக 22, 2024 18:29

எனக்கு தகவல் வரவில்லை, தெரியவில்லை, புரியவில்லை, விளங்கவில்லை, .... நான் அவனில்லை,


gmm
ஆக 22, 2024 16:30

அமைச்சரவை மாற்றம். எனக்கு தகவல் வரவில்லை. முதல்வர் பதில். உண்மை தான். தமிழகத்தில் முதல்வருக்கு தெரியாமல் பல நிகழ்வுகள் நடக்கின்றன. ஆளும் கட்சியை இயக்குவது திரைமறை சாதி, மத ஆதிக்க குழு. தேச விரோத குழு. ஜெயாவை இயக்கியது சசிகலா மட்டும் தான். ஸ்டாலினுக்கு பின் யார் என்று தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு மாநில நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளதா? மத்திய அரசு தலையிட முடியவில்லை. காரணம் நீதிமன்ற தடுப்பு சுவர். இருட்டில் முதல்வர். விடியல் முதல்வருக்கு தான் முதல் தேவை.


ஆரூர் ரங்
ஆக 22, 2024 15:25

பாவம் ரொம்ப திண்டாடுகிறார். யாராவது ஒரு சீட்டில் தகவல் அனுப்புங்க.


கூமூட்டை
ஆக 22, 2024 14:00

இது தான் கூமூட்டை திராவிட மாடல்


Bala
ஆக 22, 2024 13:53

யோ தகவல் வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு உன் அப்பாவின் சொத்து தமிழ்நாடு நீங்க முதல்வர்.


பாமரன்
ஆக 22, 2024 13:43

இப்போல்லாம் ஸ்டாலின் நல்லாவே நிருபர்களை சமாளிக்கிறார்... அதாவது சிலர் போல ஓ மை காட் ஓ மை காட்னு ஓடாமலும்...டெலிப்ராம்படர் மக்கர் பண்ணுனா காதை நோண்டி தலையை சொறிந்து ங்ஙெங்ஙெங்ஙேன்னு முழிக்காமலும்... சரிதானே?


Duruvesan
ஆக 22, 2024 15:47

முட்டு சூப்பர் மூர்க்ஸ்


Barakat Ali
ஆக 22, 2024 21:39

பட்டும் படாமல் பேசுவதும், உளறுவதும் சமாளிப்பு என்று நம்புவதற்கு அடிமைகள் இருக்கிறார்கள் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை