உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா, 110 நுாலகங்களுக்கான கூடுதல் கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் முக்கியமான மையமாக இருக்கிறது. மெட்ரோ, மின்சார ரயில், பஸ் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளதால், தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பயணியரின் வசதிக்காக, பூங்கா, வாகன நிறுத்தம் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், 1.85 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தக பூங்கா மற்றும் 29.80 கோடி ரூபாயில் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள, 110 நுாலகங்களுக்கான கூடுதல் கட்டடங்களையும், முதல்வர் திறந்து வைத்தார். மேலும், மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 70 சிறப்பு நுாலகங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன், தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் உருவாக்கப்பட்ட, 84 நுால்களும் வெளியிடப்பட்டன. இந்நுால்கள் விற்பனைக்கான, www.tntextbooksonline.comஎன்ற மின் வணிக இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டது.சென்னை புத்தக பூங்காவில், 14 பதிப்பாளர்கள் வெளியிடும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி புத்தகங்களும், தமிழ்நாடு பாடநுால் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களும் இடம்பெற்றுஉள்ளன. பள்ளி பாட புத்தகங்கள் தவிர, மற்ற புத்தகங்களுக்கு, 10 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு சிறிய அரங்கு, சிற்றுண்டி வசதியும் உள்ளது.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ், மேயர் பிரியா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை