உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெர்மனியில் இருந்தாலும் சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!

ஜெர்மனியில் இருந்தாலும் சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க, ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கே இருந்தே சென்னை மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக, நேற்றிரவு 271.5 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னை பெய்த மழை நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழை அளவு குறித்தும் அதனால் சாலைப்போக்குவரத்து, மழை நீர் வடிகால் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார். https://x.com/chennaicorp/status/1962059836503560305நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரில் பெரிய அளவில் எவ்வித பாதிப்புகள் இல்லையெனவும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் சாலைப்போக்குவரத்து சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், எத்தகைய மழைச்சூழலையும் எதிர்கொள்ள கூடிய அளவில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பெரு மழை காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஆக 31, 2025 23:36

முதல்வர் இருக்காரே அவர் மழைக்கு பயந்து ஜெர்மனி சென்றுவிட்டு, இப்பொழுது முதலை கண்ணீர் வடிக்கிறார். மழை காலம் என்று தெரியும், அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்ததும் தெரியும். தெரிந்துகொண்டு, பயந்து அங்கு சென்றுவிட்டு, இப்பொழுது மக்களின் மீது ஏதோ பெரிய கரிசனம் என்று காட்டிக்கொள்ள அங்கிருந்து கொண்டே மழை குறித்து கேட்டறிகிறாராம். என்னா நாடகம்? உண்மையிலேயே இவர்தான் சூப்பர்ஸ்டார்.


Tamilan
ஆக 31, 2025 22:08

மோடியை குஜராத்தின் கூண்டுக்குள் அடைப்பதே முதல் வேலை


Ravi
ஆக 31, 2025 20:39

போனில் பேசியே ரோட்டில் தண்ணீர் தேங்காமல் ஓட விட்ட முதல்வர் ஸ்டாலின்


Rajan A
ஆக 31, 2025 20:05

ஐயோ ஃபோட்டோ ஷுட்டிங் போச்சே


என்றும் இந்தியன்
ஆக 31, 2025 19:17

வெறும் தண்ணீர் மழை பிடிக்காததினால் தன்னிடம் உள்ள பண மழை ஜெர்மனி கொண்டு சென்றார் முதல்வர்.


Ramesh Sargam
ஆக 31, 2025 18:15

மழைக்கு பயந்து Germany சென்றுவிட்டு, இப்பொழுது நீலிக்கண்ணீர்.


Rajah
ஆக 31, 2025 17:17

மழை என்பது ஒரு குறியீட்டுச் சொல். புரிந்தால் சரி


Kjp
ஆக 31, 2025 16:39

புல்லரிக்கிறது.


ஈசன்
ஆக 31, 2025 15:49

பொறுப்பும் அக்கறையும் காட்டுகிறது முதல்வர் அவர்களின் இத்தகைய செயல். சபாஷ் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை