உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்; அண்ணாமலை ஆவேசம்

முதல்வர் ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்; அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருபெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணியை,26, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலையாளி மதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பட்டப்பகலில் வக்கீல் கண்ணன் என்பவரை மற்றொரு வக்கீலின் உதவியாளர் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒரே நாளில் பட்டப்பகலில் நடந்த இரு சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தஞ்சையில் பள்ளி ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்; ஓசூரில் வக்கீல் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தி.மு.க., அரசு நிர்வாகத்தின் மிக மோசமான சட்டம் ஒழுங்கு நிலையை எதிரொலிக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும். இது போன்ற விவகாரங்களை திசைதிருப்புவதற்கு பதிலாக, சிறிது நடவடிக்கை எடுத்திருந்தால், இது மாதிரியான சம்பவங்களை தடுத்திருக்கலாம். இதுபோன்ற சட்ட ஒழுங்கு மீறல்களை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க., அரசுக்கு கொட்டு

தி.மு.க., ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, தி.மு.க., அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் தி.மு.க., அரசு செயல்பட்டு வந்திருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க., அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற தி.மு.க., அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

SIVA
நவ 26, 2024 09:19

சாரி பாஸ் நீங்க லண்டன் போய் படிச்சது வேஸ்ட், சென்னை அண்ணா நகரில் த்து வயது பெண் பிள்ளையை ஒருவன் கற்பழித்து உள்ளான் அவன் மீது புகார் அளித்த அந்த பெண் பிள்ளையின் கண் முன்பே அந்த பெண் குழந்தையின் பெற்றோர் மீது போலீஸ் தாக்குதல் நடத்தி உள்ளது, இதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு, இவங்க கிட்ட போய் இதுக்கு வெட்கப்படணும் வேக வைக்கப்படணும் என்று அறிக்கை விடுகிண்றீர்கள், நீங்கள் திட்ட வேண்டும் என்றால் நியாமாக இந்த மக்கு மக்களையும், ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களை தான் , நீங்கள் திராவிட மாடல எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அதை சட்டை செய்ய போவது இல்லை , இந்த ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களை மக்களின் முன்பு திட்டுங்கள் அவர்களுக்கு இந்த மக்குகளுக்கும் அதிசயமாக ரோசம் வந்தாலும் வரலாம்,மக்குகளின் தகுதிக்கு ஏற்பவெ ஒரு தலைவன் இருப்பான் , முதலில் நாம் மாற்ற வேண்டியது இந்த மக்குகளை தான் , ...


Ramesh Sargam
நவ 21, 2024 20:52

முதல்வர் இப்படி நினைக்கலாம், இந்த அண்ணாமலை லண்டன் சென்று கூட நம்மள நிம்மதியா தூங்கவிட மாட்டேங்கிறார் என்று.


INDIAN
நவ 21, 2024 13:52

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா ? 10 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் தீயில் கருகி இருந்ததே அதில் ஒழுங்கு இருக்கிறதா ? மஹாராஷ்டிராவில் பாஜக வேட்பாளரிடமிருந்து கவர் செய்யப்பட்டிருந்த 5 கோடி பறிக்கப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே அதில் என்ன சட்டம் இருக்கு


Minimole P C
டிச 18, 2024 08:21

please understand issues and then comment.


தாமரை மலர்கிறது
நவ 21, 2024 00:03

சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்குள் மேற்கொண்டு கம்பெனிகள் வருவதை மத்திய அரசு மேற்கொண்டு முயற்சி செய்து தடுக்க வேண்டும். கம்பெனிகளை வடஇந்தியாவிற்கு வரி, மின்சாரம், நிதி உதவி போன்ற மானிய சலுகைகள் கொடுத்து திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனால் வடஇந்தியாவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.


பாமரன்
நவ 21, 2024 09:40

அடடே... இந்த ஐடியா நல்லாயிருக்கே... ஆச்சரிய குறி... அதிக பகோடா சாப்பிட்டால் இப்பிடி தான் மூளை வேலை செய்யும்..


Ray
நவ 26, 2024 06:43

எப்படி மலர்கிறதாம் தாமரை? ஆட்டோ வாங்கி பிழைக்கலாம் என்றால் அல்ப ஆயுசு பஜாஜ் ஆட்டோவுக்குத்தான் வங்கிகள் கடன் தருவதாகவும் TVS சுக்கு தருவதில்லை என்றும் நேற்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் வருந்தினார். குஜராத் டைல்ஸ் தான் இங்கே மழையாக கொட்டுகிறது தெரியுமாப்பா? உம்மைப்போன்ற எட்டப்ப பரம்பரையினால்தான் தமிழகம் மல்லாக்க படுத்துக்க கொண்டு துப்பிக் கொள்கிறது. சேற்றை வாரி இறைப்பதையே தொழிலாகி போனது. தமிழன் சோம்பி திரிவதால் எதற்குமே தகுதியற்றவனாக வளர்வதால்தான் இங்கே வடக்குத்தியானுக்கு தொழிலதிபர்களின் வரவேற்பு கிடைக்கிறது


தாமரை மலர்கிறது
நவ 21, 2024 00:03

சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்குள் மேற்கொண்டு கம்பெனிகள் வருவதை மத்திய அரசு மேற்கொண்டு முயற்சி செய்து தடுக்க வேண்டும். கம்பெனிகளை வடஇந்தியாவிற்கு வரி, மின்சாரம், நிதி உதவி போன்ற மானிய சலுகைகள் கொடுத்து திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனால் வடஇந்தியாவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.


தாமரை மலர்கிறது
நவ 21, 2024 00:03

சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்குள் மேற்கொண்டு கம்பெனிகள் வருவதை மத்திய அரசு மேற்கொண்டு முயற்சி செய்து தடுக்க வேண்டும். கம்பெனிகளை வடஇந்தியாவிற்கு வரி, மின்சாரம், நிதி உதவி போன்ற மானிய சலுகைகள் கொடுத்து திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனால் வடஇந்தியாவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.


R.MURALIKRISHNAN
நவ 20, 2024 22:54

சர்வாதிகாரி கிட்டே போய் .....


N Annamalai
நவ 20, 2024 22:11

காவல் துறை மீது பயம் குறைந்து விட்டதோ என்று நினைக்கிறேன் .உரிய நடவடிக்கை முன் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும் .குறை கூறி ஒரு பயனும் மில்லை .உளவுத்துறை சரி செய்யலாம் .பெரிய குற்றங்கள் சிறிய குற்றங்களில் துவங்குகிறது .


Nutri
நவ 20, 2024 22:07

இதுக்கு மட்டுமா .. எல்லாவற்றிக்குமே...


sridhar
நவ 20, 2024 21:08

இந்த மெரட்டல் எல்லாம் இங்கே வச்சிக்காதீங்க. அதெல்லாம் வெட்கம் , மானம் சூடு சொரணை இருக்கிறவங்க கிட்ட போய் சொல்லுங்க. Thimuka காரன் கிட்ட வேணாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை