உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுக்கு பலகட்ட பரிசோதனை

முதல்வர் ஸ்டாலினுக்கு பலகட்ட பரிசோதனை

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில், பலகட்ட பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், தினமும் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dije6z7c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றபோது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. எனவே, மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, பல கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும், டாக்டர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாலும், அவர் மருத்துவமனையில் மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பார் என, மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில், முதல்வரின் உடல் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு, அவரது காரில் நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வழக்கமான பரிசோதனை முடிந்த நிலையில், மீண்டும் ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு திரும்பினார். பின், மருத்துவ கண்காணிப்பில் இருந்தபடியே, வழக்கமான அலுவல் பணியை முதல்வர் மேற்கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வயது மூப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் பாதிப்புக்காக, பல்வேறு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வந்தபின், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாதபட்சத்தில், ஓரிரு நாட்களில் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஸ்டாலினை, அவரது அண்ணன் அழகிரி நேற்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். துணை முதல்வர் உதய நிதி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் நலமுடன் உள்ளார். சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

S.V.Srinivasan
ஜூலை 25, 2025 08:06

என்னதாங்க நடக்குது.


Shankar
ஜூலை 23, 2025 11:35

தலைவர் இட்லி சாப்பிட்டாராமா?


Anantharaman Srinivasan
ஜூலை 23, 2025 11:09

specialist டாக்டர்கள் இருப்பார்கள்.


தமிழ் மைந்தன்
ஜூலை 23, 2025 10:38

நாங்கள் குஜராத்திகளை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்களை பற்றி கவலைப்பட நான் குஜராத்தியும் அல்ல. நீங்கள் குஜராத்தியா? அல்லது தமிழரா? தமிழர் என்றால் தமிழ்கத்தை பற்றி மட்டும் கவலைப்பபடவும். சரி. தமிழ்க அரசு பணிகளில் குஜராத்திகளுக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு என்பதும் அதை நடைமுறை படுத்தியதும் இந்த திராவிட அரசுகள் என்பதாவது தெரியுமா? சும்மா வந்து கூவவேண்டியது இதை காட்டி இருநுறு பெற்றுக்கொள்ளவேண்டியது. சற்றே சிந்தியுங்கள் .


Kasimani Baskaran
ஜூலை 23, 2025 10:26

நலம் பெற பிரார்த்திப்போம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 23, 2025 10:18

உடல் நலம் அரசியலாகி விட்டது. தன்கர் ராஜினாமா கூடத் தான்


தமிழ் மைந்தன்
ஜூலை 23, 2025 10:43

அவர் நலமுடன் வாழவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், அவரது பதவி மட்டுமே விமர்சனம். முடியாது என்பது தெரிந்தும் ஏன் இன்னும் விடவில்லை என்பது மட்டுமே.


raja
ஜூலை 23, 2025 08:29

ஆகா ஆகா


தமிழ் மைந்தன்
ஜூலை 23, 2025 08:25

பிழைப்புக்காக சென்னை வந்தவா்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவதும் தமிழ்கத்தில் மட்டுமே நடக்கும் என்பது தங்களுக்கு தெரியமா? தெரியாதா?


Senthoora
ஜூலை 23, 2025 10:24

அப்போ குஜராத்திகள் களவாக அமெரிக்கா போய் பணக்காரன் ஆனது,


ராஜிமணாளன்
ஜூலை 23, 2025 08:12

We wish speedy recovery...GOD will bless him.He will return home shortly.


rukmani
ஜூலை 23, 2025 07:17

உடல் நலம் இல்லாதவரை பற்றி அவரை விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை தவிர மற்றவைகளை பற்றி கருத்து தெரிவிப்பது பண்பு அற்ற செயல் என்பது என் அபிப்ராயம்.


Nandakumar
ஜூலை 23, 2025 08:45

நன்றாக சொன்னீர்கள்.


Mohan
ஜூலை 23, 2025 09:32

மனிதாபிமானமும், பண்பும் அற்றவர்களிடம்...


Kjp
ஜூலை 23, 2025 10:12

என்னமோ போங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை