உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்கள் குறித்து கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும்.முதல் நாளான இன்று( ஜூன் 11) சென்னை, காங்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா உடன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

காலை உணவுத் திட்டம்

ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் துவங்கப்படும். அனைத்து திட்டங்களும் மக்களை சேர்ந்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏதும் ஏற்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Hari Bojan
ஜூன் 14, 2024 11:12

முதலில் தமிழக மக்களுக்கு என்னென்ன செய்தீர்கள் என ஒரு பெரிய பட்டியலிடுங்கள் அதில் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் யார்யாருக்கு வழங்கியிருக்கின்றீர்? அதில் எத்தனைபேர் பயனடைந்திருக்கின்றனர்? இன்னும் எத்தனை பேருக்கு அது கிடைக்கவில்லை? அது தோராயமாக எப்பொழுது கண்டிப்பாக கிடைக்கும்? அதாவது அவர்கள் கையில் போய்சேரும்? பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என கூறிவிட்டு அந்த போக்குவரத்துகளையும் குறைத்தது எத்தனை? குடிமகன்களுக்கு 180 மில்லி அதற்குமேல் எவ்வளவு ரூபாய் ஏற்றம்? அதில் வருகின்ற வருமானம் என்னவாயிற்று? அதிலிருந்து எவ்வளவு நல்ல காரியம் செய்தீர்கள்? இவைகளை முதலில் பட்டியலிட்டால் அவைகள் நல்ல காரியத்திற்காக சேர்ந்திருக்கின்றதே என குடிமகன்களுக்கு நிம்மதியாக இருப்பார்கள்.


Siva Subramaniam
ஜூன் 13, 2024 21:25

இப்போதிருந்தே பட்டுவாடா தொடங்கவேண்டும் , அதைத்தான் சொல்கிறார்.


vijai seshan
ஜூன் 12, 2024 09:16

எதுக்கு கடைசியா கொள்ளை அடிக்கிறதுக்கு


M Ramachandran
ஜூன் 11, 2024 19:40

ஆம் இந்த 2 ஆண்டுகள் மிக முக்கியம் அப்புறம் இந்த சான்சு கிடைக்குமோ கிடைக்காதோ அம்புட்டதை தைய்ய சுருட்டுடா ஆண்டி வழக்கமோழி ஞ்யாபகம் வருது


என்றும் இந்தியன்
ஜூன் 11, 2024 16:28

ஒவ்வொரு எம்பி சீட்டுக்கு செய்த செலவு ரூ 50 கோடி அதாவது ரூ 2000 கோடி மொத்தமாக என்று வைத்துக்கொண்டால் கூட அதை எப்படியாவது இந்த இரண்டு வருடத்திற்குள் தேத்தவேண்டும் அடுத்து 150 எம் எல் ஏ சீட்டு செலவுக்கும் பணம் தேத்த வேண்டும் நம்முடைய தேவைக்கும் பணம் தேத்த வேண்டும். அதாவது ரூ 2,000 கோடி + ரூ 7,500 கோடி + ரூ 20,500 = ரூ 30,000 கோடி 2 ஆண்டுகளில் தேத்த வேண்டும் இது மிக மிக முக்கியம் - முதல்வர் ஸ்டாலின் சொன்னார்


என்றும் இந்தியன்
ஜூன் 11, 2024 16:17

அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்குள் எவ்வளவு ஊழல் செய்யமுடியுமோ அவ்வளவு ஊழல் கொள்ளை அடித்து பணம் சேர்க்க வேண்டும் இல்லையென்றால் இந்த ஜென்மத்தில் திமுக ஆட்சிக்கு இனிமேல் அறவே வர முடியாது என்று மனதில் நினைத்து கூறினார் என்று அர்த்தம் புரிந்து கொள்ளவும்.


kulandai kannan
ஜூன் 11, 2024 15:59

எதற்கு, கொள்ளையடிப்பதை மேலும் தீவிரப்படுத்தவா?


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 15:22

மீட்டர் ரீடிங் எடுக்க ஆள் பற்றாக்குறையால்தான் ஒரு மாதத்திற்கு பதில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பில் கணக்கிட்டார்கள். ஆனால் இப்போது பல லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மீட்டர் ரீடிங் எடுக்க ஆள் தேவையில்லை. அவர்களுக்காவது மாதாந்திர பில் அனுப்புங்களேன் அதிலென்ன கஷ்டம்?


theruvasagan
ஜூன் 11, 2024 15:21

நமக்கு இன்னும் ரெண்டே வருசம்தான் இருக்கு. அது ஆனதும் அஞ்சு வருசம் ஆகிப் போயிடும். நமது சரித்திரத்தில் தொடர்ந்து இண்டாவது தடவை நாம ஆட்சிக்கு வந்ததே கிடையாது. ஏன்னா நம்ம செயல்பாடுகள் அப்பிடி. அதனாலே காத்துள்ள போதே தூத்திக்கணும். மறக்காதீங்க.


GMM
ஜூன் 11, 2024 15:13

வரும் இரண்டு ஆண்டுகள் முக்கியம். ஊழலினால் ஆபத்து ஏற்படும் ஆண்டுகள். மத்தியில் இண்டியா கூட்டணி இல்லாமல் நிம்மதி இல்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை