உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வின்பாஸ்ட் தொழிற்சாலை ஜூலை 31ல் முதல்வர் திறப்பு

வின்பாஸ்ட் தொழிற்சாலை ஜூலை 31ல் முதல்வர் திறப்பு

துாத்துக்குடி:மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான, 'வின்பாஸ்ட்' தொழிற்சாலையை ஜூலை, 31ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் என்ற மின்சார வாகன உற்பத்தி நிறுவனம், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாநத்தம் சிப்காட்டில், 408 ஏக்கரில், 4,000 கோடி ரூபாயில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், 2024 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வந்தார். பணிகள் முடிவடைந்த நிலையில், வரும், 31ம் தேதி, முதல்வர் தொழிற்சாலையை திறந்து வைப்பார் என, வின்பாஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர் நேரில் வர இயலவில்லை என்றால், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொழிற்சாலையை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ