உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளியில் சோகம்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளியில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் 4 வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கும் லியா லட்சுமி என்ற அக்குழந்தை, கழிவுநீர் தொட்டியில் விளையாடி கொண்டிருந்த போது, தவறி உள்ளே விழுந்து உயிரிழந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=56alzbdl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 11 மணிக்கு குழந்தை உள்ளே விழுந்த நிலையில், பள்ளி விடும்போது மாலை 3 மணிக்குத் தான் குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் தேடியதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

விசாரணை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அன்பழகன் கூறுகையில்,' குழந்தை இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

உத்தரவு

குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக, தனியார் பள்ளி இயக்குநர் முத்துபழனிசாமி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கண்டனம்

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எல்.கே.ஜி., படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mohanakrishnan
ஜன 03, 2025 22:40

சாராயம் குடித்து போதையில் விழுந்திருந்தால் 50 லட்சம் கொடுத்திருப்பார்கள்


Barakat Ali
ஜன 03, 2025 21:42

கள்ளச்சாராய பலிகளுக்குக் கூட பத்து லட்சம் .... குழந்தையின் மரணத்துக்கு 3 லட்சம் .. அதையும் பெற்றவர்களின் கனவுகளைச் சிதைத்த பள்ளி ஏன் கொடுக்காது ???


ManiK
ஜன 03, 2025 21:38

பள்ளி பேரு போதும் ஒரு பிரச்சினையும் வராது ஸ்டாவின் மாடலால். FIR Expert


shakti
ஜன 03, 2025 21:28

கிறித்துவ பள்ளி, கிறித்துவ குழந்தை .. அவர்களுக்குள் செட்டில் செய்து கொள்வார்கள் ... எல்லாம் மகிமை மகிமை


Bala
ஜன 03, 2025 21:24

நிவாரண தொகையை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். அரசு கஜானாவில் இருந்து கொடுக்க கூடாது. கட்டண கொள்ளை செய்யும் நிர்வாகம்தானே. சிறுபான்மையினர் என்று ஒட்டு வங்கி சலுகை காட்டக்கூடாது.


Svs Yaadum oore
ஜன 03, 2025 21:23

உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என்று முதல்வர்.......இந்த பள்ளி ஹிந்து மதம் சார்ந்த பள்ளியாக இருந்தால் இந்நேரம் விசாரணை ஆய்வு கைது என்று நெறியாளனுங்க ஊளையிடுவானுங்க ....மதம் மாற்றி பள்ளி என்பதால் விடியல் திராவிடனுங்க வாய் திறக்க மாட்டானுங்க


ஓவிய விஜய், mumbai
ஜன 03, 2025 21:11

நல்ல மாடல். கள்ள சாராயம் = 25 லட்சம், குழந்தை இறப்பு = 3


r ravichandran
ஜன 03, 2025 21:07

நடவடிக்கை எதுவும் எடுக்க படாது, காரணம் ஓட்டு கிடைக்காமல் போய் விடும். இதுவே ஒரு இந்து பெயரில் உள்ள பள்ளி என்று இருந்தால், அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் பாய்ந்து வந்து இருப்பார்கள்.


Azar Mufeen
ஜன 03, 2025 23:12

அட ஆமாங்க, உத்திர பிரதேசத்தில் 6வயது குழந்தையை கற்பழித்து கொன்ற பள்ளி முதல்வர், தான் சார்ந்திருக்கும் மதம் என்றதால் அந்த பள்ளியை புல்டோசர் இடிக்கவில்லை அந்த மாநில முதல்வர், ஆக இந்த இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


raja
ஜன 03, 2025 20:51

விடியலுக்கு பிச்சை போட்டவர்களின் பள்ளி என்பதால் அந்த குழந்தை தான் கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்து விழுந்து இறந்து விட்டது...தனியார் பள்ளி மேல் எந்த தவறும் இல்லை...


Bala
ஜன 03, 2025 20:04

இழப்பீடு கொடுத்து மூடி விடுவார்கள்.யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். பள்ளியின் பெயரை பார்க்க வேண்டும். திருநெல்வேலி பள்ளியில் சுவர் இடிந்து சிலர் இறந்த சம்பவத்தில் என்ன ஆயிற்று?? அதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை