உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

கரூர்: கரூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக, மனித உரிமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. கரூரில் ஓட்டல்களில் எச்சில் இலை எடுப்பதற்கும், உணவகங்களை சுத்தப்படுத்துவதற்கும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இதே போல் அங்குள்ள பெட்ரோல் பங்குகளிலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலேயே இவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ