உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -17 : சேவையே தேவை

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -17 : சேவையே தேவை

சேவையே தேவை

'நீயோ தர்மம் செய்யும் போது அது அந்தரங்கமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது' என்கிறது பைபிள். அதாவது நீங்கள் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள். இது நல்ல விஷயம். ஆனால் வருவோர், போவோரிடம் இதை 'நான் செய்தேன். என்னால்தான் இவன் குடும்பம் பிழைக்கிறது' என செய்ததை சொல்லிக் காட்டக் கூடாது என்கிறது.இதை இயற்கையிடம் இருந்து கூட கற்றுக் கொள்ளலாம். சூரியன் ஒளி கொடுக்கிறது. மரங்கள் கனி தருகின்றன. பூக்கள் மணம் பரப்புகின்றன. உப்பு உணவோடு கலந்து ருசியைத் தருகிறது. இப்படி இவை தங்களையே தியாகம் செய்து மக்களுக்கு உதவுகின்றன. ஆனால் சேவையை வெளிக்காட்டுவதில்லை. இவற்றை படைத்ததற்கு காரணம் மனிதன் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். தர்மம் செய்வோரை ஆண்டவர் ஏற்றுக் கொள்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ