கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-4
தீமை செய்யாதீர்தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு தீங்கு விளைவிப்பது பாவம். இது குறித்து பைபிள் சொல்வதை கேளுங்கள். * தீமையிலிருந்து தீமை புறப்படும்.* தீமையில் மகிழ்ச்சி அடையாது அன்பு. ஆனால் சத்தியத்தில் மகிழ்ச்சி அடையும். * எல்லா வகையான தீமைகளையும் நிராகரியுங்கள். * முட்டாளின் இதயம் தீமையின் மேல் சாய்ந்து இருக்கிறது* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்பவர்களுக்கு துயரம்தான் மிஞ்சும். * தீமை செய்யும் ஒவ்வொருவரும்ஒளியை வெறுக்கிறார்கள். * மனிதர்கள் சகோதரர்களே... பிறகு ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொள்ள வேண்டும். * கசப்பான இதயத்தில் இருந்து அக்கிரமம் தோன்றும். * தீமையாய் தோன்றும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.