உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்

மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்

திருச்சி : ''பொதுமக்களின் மருந்து செலவை குறைக்கும் நோக்கத்தில், ஜெனரிக் மருந்துகள் விற்பனைக்காக முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது,'' அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகம், அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைந்துள்ள மருத்துவக் கிடங்கு போன்றவற்றை ஆய்வு செய்தார்.அதன் பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வர் அறிவித்தபடி, 1,000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது.அன்றாடம் பயன்படுத்தப்படும் 186 மருந்து பொருட்கள்,தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, முதல்வர் மருந்தகம் மூலம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க, 300 தனி நபர்களும், கூட்டுறவு துறை சார்பில் 440 உரிமமும் பெற்றுள்ளனர். இதுவரை, 898 முதல்வர் மருந்தகம் திறக்க தயார் நிலையில் உள்ளன. சென்னையில், இம் மருந்தகத்தை முதல்வர் திறந்து வைத்த பின், மாநிலம் மற்றும் மாவட்ட கிடங்குகள் வாயிலாக, மருந்துகள் சப்ளை செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களில் விற்பனை நடைபெறும்.தமிழகத்தில் இந்த ஆண்டு காரீப் பருவத்தில் இதுவரை, 11.44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 1.41 லட்சம் விவசாயிகளுக்கு, 2,489 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு, இன்னும் ஒரு சில நாட்களில் நிலுவைத் தொகை முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டு விடும். கடந்த ஆண்டு இதே நேரத்தின் (8.1 மெட்ரிக் டன்) கொள்முதலோடு ஒப்பிடும் போது, இதுவரை 3.3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 380 குடோன்களில் 20.32 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்கும் வசதி உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 2,186 ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை, 37 ஆயிரம் ரேஷன் கடைகளில் 10,000 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், 17.44 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2.4 லட்சம் பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் 98 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 15.69 லட்சம் விவிவசாயிகளுக்கு, 14,141 கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, 16,500 கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கால்நடை கடன், 2,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4.06 லட்சம் விவசாயிகளுக்கு 2,426 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 45,047 சுய உதவி குழுக்களுக்கு 3,433 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.இது தவிர கூட்டுறவு சங்கங்களில், 23 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில், இது வரை 82 லட்சம் பேருக்கு 86,541 கோடிவழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு துறை வாயிலாக, அம்மா மருந்தகம் உட்பட இரண்டு வகையான மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இரண்டும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.மாதம் 2,000 ரூபாய் வரை, பொதுமக்களின் மருந்து செலவை குறைக்கும் நோக்கத்தில், ஜெனரிக் மருந்துகள் விற்பனைக்காக முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R.RAMACHANDRAN
பிப் 10, 2025 09:19

மத்தியில் ஆள்பவர்கள் மாநிலத்தில் உள்ள திட்டங்களை போன்ற திட்டங்களை ஆரம்பிப்பதும் மாநிலத்தில் உள்ளவர்கள் மத்தியில் ஆள்பவர்களின் திட்டங்களை போன்ற திட்டங்களை ஆரம்பித்து மக்களை வாக்குகளை கவருவதிலேயே குறியாக இருக்கின்றனரே அன்றி மக்களுக்கு தகுந்த திட்டங்களை தீட்ட விரும்பவில்லை.


Visu
பிப் 09, 2025 23:15

வைகுண்டா என்று பொய்யான பெயரில் கருத்துப்போடும் குருடரே தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்


D Natarajan
பிப் 09, 2025 21:00

இது உ பி ஸ் நடத்தும் மருந்தகம். காலாவதியான மருந்து மட்டும் கிடைக்கும் . மக்களே உஷார்


R.MURALIKRISHNAN
பிப் 09, 2025 17:51

போன ஜென்மத்தில் ஸ்டிக்கர் கம்பெனி வைத்திருப்பார்கள் போல


M Ramachandran
பிப் 09, 2025 16:41

ஜெயலலிதா அம்மையார் பெயரில் ஆரம்பித்த அம்மா மருந்தகம் நன்றாக தானெ போய் கொண்டிருந்தது. அதற்க்கு ஸ்டாலின் மூடு விழா நடத்தி இப்போ தன் பெயரில் தம்பட்டமா? அசிங்கம் பிடித்த அரசு. பல நல்லோர்கள் தமிழ் மண்ணில் பிறந்துமவர்கள் பெயரையெல்லாம் மறக்கடித்து விட்டு தமிழே தகராறு


enkeyem
பிப் 09, 2025 12:56

ஏற்கெனவே ஜன் தன் மெடிக்கல்ஸ் என்று இயங்கிவரும் பிரதமரின் ஜெனிரிக் மருந்தகங்களின் மீது தி மு க அரசு ஓட்டும் ஸ்டிக்கர். உருப்படியாக எதுவும் இந்த அரசு செய்யாது


S Nagarajan
பிப் 09, 2025 12:39

மு.க.ஸ்., பிரதமர் மோடி போல எல்லாம் தனக்கும் நடக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், மோடி அவர்களின் செயல்திறனில் .00000001% கூட மு.க.ஸ்.க்கும் இல்லை மற்றும் அவருடன் இருக்கும் எவருக்கும் இல்லை.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 09, 2025 09:51

வெட்டி பயலுக, நான் 4 வருசமா மோடி கடையில் தான் மருந்து வாங்கறேன், கிட்ட தட்ட 70% மிச்சம்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 09, 2025 13:10

மோடி மருந்து கடையா? அப்படியென்றால் என்ன?


Shekar
பிப் 09, 2025 14:47

மோடி மருந்து கடையா?..உபி ஸ் க்கு டாஸ்மாக் மட்டும்தான் தெரியும்


Kalyanaraman
பிப் 09, 2025 08:50

நாட்டுல பெரும்பாலான சாலைகள் குண்டு குழியுமா இருக்கு, சாக்கடை ஓடுது... இப்படி சரி செய்ய வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கும்போது இந்த மருந்தகம் தேவையா. ஏற்கனவே மத்திய அரசின் மோடி மருந்தகம் நாடு சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதெல்லாம் எலக்சன்ல பயன்படும்னு நினைக்கிறாங்க. ஸ்டிக்கர் ஒட்டுவதும் காப்பி அடிக்கிறதும் - இதே பொழப்பா போச்சு திமுக அரசுக்கு. சொந்த மூளையே கிடையாது.


VENKATASUBRAMANIAN
பிப் 09, 2025 08:08

பாஜக தூங்குகிறது. இது பாஜக மோடி அறிவித்த திட்டத்தின் அப்பட்ட காப்பி. இதுதான் திமுக. திராவிட மாடல். இதையே மற்றவர்கள் செய்திருந்தால் இன்னேரம் திமுக பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றிருக்கும். ஆனால் பாஜக தூங்கி வழிகிறது. அண்ணாமலை மட்டுமே போதாது. மற்றவர்களும் உழைக்க வேண்டும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 09, 2025 13:15

"பாஜக மோடி அறிவித்த திட்டத்தின் அப்பட்ட காப்பி." -அப்படியா?? அதென்ன அறிவிப்பு? என்ன திட்டம்?? அமலுக்கு வந்து விட்டதா? டெல்லியில் மட்டுமா அல்லது இந்தியா முழுவதுமா? இப்படி மருந்தகங்கள் இருக்கின்றனவா? என்ன பேரில்?? "பிரதமர் மருந்தகம் " or "PMs pharmacy"? I had not seen anywhere.


முக்கிய வீடியோ