உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் அறிவுரை

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் அறிவுரை

சென்னை : சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்யக்கோருவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.,9 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பேச்சு நடத்தியும் எந்த முடிவும் வரவில்லை. இதனிடையே நாளை மறுநாள்( அக்., 07) தொழிலாளர்கள், நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 05, 2024 21:26

தீர்வுதான் காணவேண்டும். அவர்களை மிரட்டி போராட்டத்தை நிறுத்த முயலக்கூடாது.


M Ramachandran
அக் 05, 2024 20:20

சரியான கவனிப்பு இல்லையா?மூடு விழா பிரச்சனையா?


S Sivakumar
அக் 05, 2024 17:16

இது எங்கிருந்து கிளம்பியது அங்கே தான்‌ முடிவுக்கு வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை