உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க பிரிட்டன் முதல் தமிழ் பெண் எம்.பிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க பிரிட்டன் முதல் தமிழ் பெண் எம்.பிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இலங்கை தமிழ் பெண் எம்.பிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.நடந்து முடிந்த பிரிட்டன் பார்லி.,தேர்தலில் இலங்கை தமிழ் பெண் உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கூறுகையில் என் மீதும் தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும், உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன் என்றார். இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது: பிரிட்டன் பார்லி.,யில் முதல் இலங்கை தமிழ் பெண் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.வெற்றியின் மூலம் தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்து உள்ளார் .மேலும் தமிழ் சமூகத்திற்கு பெருமையை தேடி தரவேண்டும். என பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
ஜூலை 06, 2024 13:14

திமுகவுக்கு எதிராக பாஜகவினர் எவ்வளவு முக்கி முனகிக் கருத்து எழுதினாலும், பேசினாலும் தமிழர்கள் பாஜகவினரை நம்பத் தயாரில்லை. ஏனென்றால் பாஜகவின் நம்பகத்தன்மை அவ்வளவு கேவலமானது.


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 05:23

இலங்கை தமிழ் சமூகத்துக்கு பெருமை சேர்த்த என்று சொல்லி இருக்கலாம். காங்கிரஸ் கழகங்கள் சேர்ந்து கொல்லாமல் விட்டு தப்பிச்சென்று பிழைத்த வம்சாவழி தமிழ்ப்பெண் என்று போட்டிருக்கலாம்.


Rama
ஜூலை 06, 2024 01:25

பதவி ஏற்கும் போது ஏதேனும் கோஷம் எழுப்புவார் என்று எதிர்பார்க்கலாமா?


Bala
ஜூலை 06, 2024 00:19

கிளிஞ்சுது போ, தெலுங்ர் ஈழத்தமிழருக்கு வாழத்தா ? தமிழினத்தை அழித்துக்கொண்டு இருக்கும் கும்பல் தொலைவன் தலைவனல்ல.


Vasu
ஜூலை 05, 2024 23:20

அடுத்தது இங்கிலாந்து பயணம். குடும்பத்தோட அங்கே பொய் வாழ்த்து சொல்லிட்டு வருவார்.


kalyan
ஜூலை 05, 2024 22:57

இவராவது அநங்கேயே பிறந்து வளர்ந்தவர் . கேரளாவில் பிறந்து 2001 ஆண்டு இங்கிலாந்துக்கு குடியேறி கடுமையாக உழைத்து முதலில் City Council , பிறகு Mayor, தற்போது Labour Party MP யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரும் உள்ளார் இப்போது, அவருடைய தாய் தந்தையர் இப்போதும் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் வாழ்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்


PRSwamy
ஜூலை 05, 2024 22:07

எல்லாம் கரெக்ட். அறிவாலய மூல டாக்குமெண்ட் எங்க? நம்ம தமிழ் அடுக்கு மொழி பிறகு பேசுவோம்.


THINAKAREN KARAMANI
ஜூலை 05, 2024 21:59

பிரிட்டனின் முதல் தமிழ் பெண் எம்.பி.க்கு நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இந்த வெற்றியால் நம் பெண்களுக்குப் பெருமை நம் தமிழ் மண்ணுக்குப் பெருமை நம் இந்திய நாட்டுக்கே பெருமை THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


ஆரூர் ரங்
ஜூலை 05, 2024 21:56

என்னதான் வாழ்த்தினாலும் காங்கிரஸ் திமுக காலத்தில் நடத்தப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலையை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். அவர்கள் 200 உ.பி ஸ் அல்ல


Sridharan Venkatraman
ஜூலை 05, 2024 21:41

இவர் சொல்லித்தான் அந்த அம்மா தேர்தல் - ல போட்டி போட்டாங்க. ஆஹா ..... 41 க்கு 41.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை