உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்

ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆணைகள் அனைத்தும் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என மொத்தம் 10 துறைகளின் அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் அரசின் அறிவிப்பாணைகளின் செயலாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதை விரைவுபடுத்தும் வகையில் உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.பின்னர் ஆய்வுக்கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி 28 விநாடிகள் அடங்கிய வீடியோவுடன் கூடிய ஒரு பதிவை அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளதாவது; நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.அறிவித்தால் ஆணையாக வேண்டும். அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும். அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kjp
ஜூலை 07, 2025 22:18

உங்க அப்பா ஆட்சி செய்தது என்ன மாடல்.அப்போது ஆணைகள் செயலாக்கம் பெறவில்லையா? திராவிட மாடல் திராவிட மாடல் என்று சும்மா எதற்கெடுத்தாலும் சொல்லி மக்களை நோக வைக்கிறார்.எதுவும் அளவோடு இருக்க வேண்டும்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் காலக் கொடுமை.


S Balakrishnan
ஜூலை 07, 2025 22:02

என்னவோ நடக்குது. என்னவோ சொல்வார். அதிகார துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை, கொக்கென் போதை இப்படி எத்தனையோ மக்கள் துன்பப் படும் விஷயங்களை எதுவும் கண்டு கொள்ளாமல் மூடி மறைப்பது தான் திராவிட மாடல் என்று ஒரு அறிக்கை விடலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 21:28

வழக்குப் போட்டு கஷ்டப்பட்டு வாங்கிய காவிரி நீரை கடலுக்கு விடுவது ஆச்சரியப்படத்தக்க சிறப்பு செயல்திட்டம்?


K V Ramadoss
ஜூலை 07, 2025 21:11

இது என்ன எதெற்கெடுத்தாலும் திராவிட மாடல் ? யாருக்கும் புரியாத மாடல் ?


Nagarajan D
ஜூலை 07, 2025 21:05

யாரு அந்த ஆணைகள் பிறப்பிப்பாங்க? ஓஒ அந்த சாருங்களா? யாரு அந்த சார்... போலீஸ்காரனுங்களுக்கு உத்தரவு போடுறவனுங்க யாரு?


R.MURALIKRISHNAN
ஜூலை 07, 2025 20:46

ஏற்கனவே உங்கள் திருட்டு திராவிட மாடலின் செயலாக்கம் அறிந்து மக்கள் எல்லோரும் வரும் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கோம் முதல்வரே.


ManiK
ஜூலை 07, 2025 20:33

திராவிட மாடல் என்றால் என்ன?... இதுதான் திராவிட மாடல்... அதேதான் திராவிட மாடல்... இது சில பொதுக்கூட்டங்களில் அண்ணா என்ன சொன்னார்?.... பெரியாரு என்ன சொன்னார்??... என்று பதிலே தெரியாமல் கேள்விகளை அடுக்குவது போல தான் இருக்கிறது.