உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்!

நடிகர் விஜய் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பெயரை உச்சரிக்காமல் கரூர் சம்பவம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார். தமிழக சட்டசபைக்கூட்டத் தொடர் 2வது நாளாக இன்று கூடியது. அவையில் முக்கிய நிகழ்வாக கரூர் சம்பவம் பற்றிய விவாதம் இடம்பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n4lawyoz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நீண்ட விளக்கம் ஒன்றை வாசித்தார். அவர் பேசிய அந்த உரையில், கரூர் சம்பவத்தில் நடந்தது என்ன? அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள், கரூருக்கு தான் சென்ற விவரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். மொத்தம் அவரின் உரை 16 நிமிடங்கள் அடங்கி இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் விளக்கத்தில் எந்த இடத்திலும் நடிகர் விஜய் பெயரை அவர் உச்சரிக்கவே இல்லை. அக்கட்சித் தலைவர், தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர், அவரின் அரசியல் நிகழ்ச்சி, இந்த கட்சியின் (தவெகவை குறிப்பிடுகிறார்) நிகழ்ச்சி, தவெக கட்சியின் தலைவர் என்றுதான் உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் பேசிய அவரின் உரையில் எந்த இடத்திலும் நடிகர் விஜய் என்றோ, விஜய் என்றோ அல்லது தவெக தலைவர் விஜய் என்றோ குறிப்பிடவும் இல்லை, உச்சரிக்கவும் இல்லை. இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறியதாவது; பொதுவாக அரசியல் களத்தில் வளர்ந்து வரும் அல்லது மக்களின் அங்கீகாரம் பெறாத (ஓட்டுகள் வாயிலாக அல்லது ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில்) கட்சிகளின் பெயர்களையும் அவர்களின் செயல்களையும் கவனமாக கையாள்வது திமுகவின் அரசியல் ஸ்டைல். அதாவது எந்த சந்தர்ப்பத்திலும், எத்தகைய சூழலில் பெயர்களை உச்சரிக்காமல் (அவர்கள் பாணியில் முக்கியத்துவம் தராமல்) தவிர்ப்பதில் திமுக கவனமாக செயல்படும் கட்சி. விஜய்யை பற்றியோ, அவரின் கட்சியை பற்றியோ பெரிதாக பேச வேண்டாம், பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர்கள், முதல்கட்ட மற்றும் 2ம் கட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தான் விஜய் பெயரை குறிப்பிடாமல் பேசியிருக்கிறார் முதல்வர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Venkat esh
அக் 15, 2025 21:05

சொல்ல வார்த்தை இல்லை..... அப்படி ஒரு பிழைப்பு


KRISHNAN R
அக் 15, 2025 19:59

இரண்டு கழக கலவை தான் புது கட்சி காட்சி எல்லாம்


T.sthivinayagam
அக் 15, 2025 19:30

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அவர்கள் டிவி பார்த்தாவது தெரிந்து கொண்டார் விஜய் ஜீக்கு அதுவும் தெரியாது என்று தொண்டர்கள் பேசுகின்றனர்.


vivek
அக் 15, 2025 20:35

நீ எப்போ சொந்தமா பேசுவாய் சிவநாயகம்


திகழ்ஓவியன்
அக் 15, 2025 19:29

இது தான் ஸ்டாலின் அங்கிள் பெருந்தன்மை


Modisha
அக் 15, 2025 22:47

அங்கிள் இல்லை , கொள்ளு தாத்தா .


oviya vijay
அக் 15, 2025 19:28

அவ்வளவு பயம்....? இதுவே த வெ க வுக்கு முதல் வெற்றி.


Mariadoss E
அக் 15, 2025 20:38

இது தான் அரசியல் பக்குவம்


இராம தாசன்
அக் 15, 2025 19:04

//இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நீண்ட விளக்கம் ஒன்றை வாசித்தார். மொத்தம் அவரின் உரை 16 நிமிடங்கள் அடங்கி இருந்தது. /// இது தான் நீண்ட உரை என்பதோ?


M Ramachandran
அக் 15, 2025 18:30

200 ஊபீஸுக்கு கட்டளை.


RAMESH KUMAR R V
அக் 15, 2025 18:13

எல்லாம் ஆட்சி மோகம்


duruvasar
அக் 15, 2025 18:07

பீ டீம் தலைவரை அசிங்கப்படுத்தும் அளவுக்கு எங்களுக்கு மாண்பு கெடவில்லை.


Natchimuthu Chithiraisamy
அக் 15, 2025 17:26

ஒரே இனமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை