உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்; முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்பத்தினரும் சேர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் எம்பிக்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நிற்பேன். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நீதிக்காகப் போராடுவேன். ஒருபோதும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நீதிக்காகப் போராடுவேன். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 117 )

Ramesh Sargam
அக் 11, 2025 12:48

ஒவ்வொரு தமிழன் மீதும் அவ்வளவு கடன் சுமை . அவனால எங்கப்பா தலை நிமிர முடியும். அவன் உங்கள் ஆட்சியில் கடன் சுமையால் தலை குணிந்தவந்தான். இன்னும் நிமிரல. இதில் தலை குனிய விடமாட்டாராம்.


kumarkv
அக் 08, 2025 11:50

இதுக்கு மேல் என்ன வேண்டும்


Thravisham
அக் 07, 2025 11:22

எக்கச்சக்க பணம் சேர்த்தாச்சு


tamilvanan
அக் 04, 2025 21:16

கரூரில் நடந்த சம்பவத்தின் போது யார் ஆட்சி செய்தது. தலை குனியாமல் நிமிர்ந்து நின்றீர்களோ ?


Mohan Venkat
செப் 28, 2025 18:08

ஸ்டாலின் தமிழகத்துக்கு தலைவலிதான்


vijayaraj
செப் 25, 2025 09:20

தமிழகம் ஒரு நொடி கூட தலை நிமிர்ந்தது கிடையாது. சதா தலை குனிவு தான் முதல்வரே. யாராவது நிமிர்ந்ந்தது என்று துண்டு ஷீட்டு எழுதி கொடுத்தாலாவது எந்த விஷயத்தில் என்று படிக்கவும்.


Indian
செப் 22, 2025 15:28

ஒரு நல்ல கருத்தை தலைவர் சொன்னால் , சங்கிகள் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள் .


Thravisham
அக் 07, 2025 11:23

ஏய் 200ரூவா


S.V.Srinivasan
செப் 19, 2025 08:27

என்னைக்கு நிமிர்ந்துருக்கு, இப்போ குனியரத்துக்கு?


Harindra Prasad R
செப் 18, 2025 20:02

தலைவரே நாட்டில் என்ன நடக்கிறது என்று முதலில் தெரிந்துகொள்ள முயற்சியாவது செய்யுங்கள் அப்புறம் தமிழகம் நிமிர்கிறதா அல்லது குனிந்து நிற்கிறதா என்று பாப்போம் ....


Madras Madra
செப் 18, 2025 11:47

முதுகு வளைந்து மண்ணோடு மண்ணாகி விட்டது இதற்க்கு மேல் குனிய விட முக்கினாலும் முடியாது அதற்க்கு இவர் காரணமாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை