உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க உத்தரவு

அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க ஸ்டாலின் உத்தரவிட்டார்.எளிய மக்களுக்கு மலிவான உணவு வழங்கிடும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது அம்மா உணவகம். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. இன்று (ஜூலை 19) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0gcimrec&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதில், புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடி; புனரமைப்பு பணிகளுக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்படுகிறது. அம்மா உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Jai
ஜூலை 20, 2024 08:57

ஆட்சி அமைத்ததில் இருந்து இதுவரை அம்மா உணவகத்தை முடக்கவே முயற்சி செய்தார்கள். தற்போது அதிமுகவின் ஓட்டுகளை எப்படியாவது பெறத்தான் இந்த அம்மா உணவகத்தை மேம்படுத்துவோம் என்ற பேச்செல்லாம். அதிமுக எப்படியும் அழியப் போகிறது அதன் ஓட்டுகள் பாஜகவிற்கு செல்லாமல் தங்கள் பக்கம் எடுத்துக் கொள்ளத்தான் இந்த வழக்கம்போல ஒரு நாடகம்.


sankaranarayanan
ஜூலை 19, 2024 22:32

இனி தமிழகத்தில் எல்லா அம்மா உணவகங்களும் அப்பா உணவகம் என்று மாற்றி அமைக்கப்படும் அப்போதுதான் தரமான உணவு மக்களுக்கு கிடைக்கும் இப்படி உறவுகளை சொல்லியே தமிழகத்தில் அரசு எல்லா பெயர்பலகைகளையும் மாற்றி அமைத்து வருகின்றது


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 19:31

ஒதுக்க...


Balasubramanian
ஜூலை 19, 2024 18:11

ஒரு ஐஸ்கிரீம் குச்சியில் ருசி பார்த்து இருக்கலாம்!


ganapathy
ஜூலை 19, 2024 16:01

இந்தாளு ஆய்வு செஞ்ச லட்சணந்தான் இப்ப வீடியோவா பரவுவது. சோற நக்கிட்டு நக்குன கைய அந்த சோற்று பாத்திரத்தின் மேலயே உதறி அசிங்கமா ரணகண ஆய்வு செஞ்சு...இந்த ஆளுக்கு இது மாதிரி யாராவது ஆய்வு செஞ்சு கொடுத்தா சாப்பிடுவானா...மக்களை முட்டாளாக கேனயர்களாக நினைக்கும் ஆணவம்...ஏன்னா திரும்பவும் காசு வாங்கினு இவனுக்கே ஒட்டு போடும் மக்கள்...


Durai Kuppusami
ஜூலை 19, 2024 20:56

இப்போது தான் நான் பார்த்தேன் அவர்ஆய்வு செய்த சாதத்தை வீசி எறிவது மட்டும் தெரிகிறது...என்னவோ


GMM
ஜூலை 19, 2024 14:07

அம்மா உணவகம் தமிழக அனைத்து பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரி... போன்ற மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் நிறுவ வேண்டும். இதன் உணவின் தரம், விலை போதும். பராமரிப்பு சரியில்லை. விற்பனையை கூட்டினால், அதிக நிதி ஒதுக்கீடு செய்ய அவசியம் இருக்காது. மற்றும் ஹோட்டல் தமிழ்நாடு உணவு பிரிவு இது போன்ற இடங்களில் துவங்க வேண்டும்.


sundarsvpr
ஜூலை 19, 2024 13:22

குழந்தைகளுக்கு உணவு வழங்குவது தர்மம். நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் உடலில் ஓட்டும். சாராய விற்பனையில் சம்பாதித்த பணத்தில் சிறுது அளவு தொகை குழந்தைகள் உணவிற்கு கொடுத்தால் சிறுது அளவு பாவம் கொழந்தைகளுக்கு ஓட்டும். சாராய துறையிடமிருந்து பணம் ஒதுக்குவதை தவிர்க்கலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி