உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், இச்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. ஜூலை 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த 3 சட்டங்களையும் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட 3 குற்றவியல் சட்டங்களும் அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொதுப் பட்டியலில் இருந்தபோதிலும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். கருத்து தெரிவிக்க மாநிலங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை.

சமஸ்கிருதம்

எதிர்க்கட்சிகளின் பங்களிப்பே இல்லாமல் பார்லிமென்டில் 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றிற்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அபினியம் என சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியிருப்பது அரசியல் சட்டத்தின் 348வது பிரிவை அப்பட்டமாக மீறும் செயல். பார்லிமென்டில் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம். எனவே சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

முரண்பட்ட விளக்கங்கள்

3 புதிய குற்றவியல் சட்டங்களிலும் அடிப்படையில் சில தவறுகள் உள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103வது பிரிவு, இரு வேறுபட்ட கொலைச் செயல்கள் பற்றி குறிப்பிட்ட போதிலும் ஒரே தண்டனையை விதிக்க வகை செய்கிறது. மற்றவற்றிலும் தெளிவற்ற குழப்பமான சட்டப்பிரிவுகளும், முரண்பட்ட விளக்கங்களும் உள்ளன. 3 புதிய சட்டங்களையும் அமல்படுத்தும் முன் கல்வி நிலையங்களுடன் விவாதிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

venugopal s
ஜூன் 19, 2024 10:49

திமுக எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக தமிழக முதல்வர் செய்யும் நியாயமான செயல்பாடுகளைக் கூட கண்மூடித்தனமாக எதிர்க்க குருட்டு பக்தர்களால் மட்டுமே முடியும்!


Ganesh Kumar
ஜூன் 19, 2024 01:32

சட்டம் இயற்றும் போதும், அதை நிறைவேற்றும் போதும் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு இப்போ கூவுகிறார் இந்த பித்தலாட்ட பொய்க்குடும்ப வாரிசு, எதுவுமே மாறாது என்ற நிலைமையில் - தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே, தமிழ் மக்களும் காசுக்கு அடிமைகள் தானே, சுயமாக சிந்திக்க செயலட்டவர்கள்


kumar
ஜூன் 19, 2024 01:21

ஆங்கிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பெயர் சமஸ்க்ரிதத்தில் இருப்பதற்கு தடை இல்லை.


Kumar Kumzi
ஜூன் 18, 2024 22:43

குற்றவாளிகள் ரவுடிகளின் கூடாரமான தீய திமுக உறுப்பினர்கள் மட்டிக்கொள்வார்கள் என்ற பயமா ஆமா உனது பெயரின் தமிழாக்கம் என்ன விடியல்


இராம தாசன்
ஜூன் 18, 2024 22:02

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே , உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன் // இந்த ஜெபத்தில் எத்தனை சமஸ்க்ரித வார்த்தைகள் பர, லோகம், பிதா, நாமம்,இராஜ்ஜியம், ஜெபிக்கிறேன் . விடியலார் இதையும் கண்டிப்பார் என்று நம்புவோம்


Sundar R
ஜூன் 18, 2024 21:54

எதிர்ப்பதற்கு பதில் ஆலோசனைகளை எழுதலாம்


konanki
ஜூன் 18, 2024 21:39

கருணாநிதி, உதய சூரியன், உதய நிதி, ஆதித்யா, வேத மூர்த்தி போன்ற சமஸ்கிருத பெயர்களை நீக்கவும் கடிதம் எழுதுவாரா முதல்வர்??


சி சொர்ணரதி
ஜூன் 18, 2024 21:39

உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டியது தானே..


Shekar
ஜூன் 18, 2024 21:00

ஸ்டாலின் அப்படிங்கிற பெயர்கூட தமிழ் இல்லை, ஏன் இந்திய மொழியே இல்லை. நாங்க ஏதாவது சொன்னோமா?


தமிழ்வேள்
ஜூன் 18, 2024 20:45

இவருக்கு அண்ணா துரைகருணாநிதி ராமசாமி நாயக்கர் பெயர்களை தவிர வேறு என்ன தெரியும்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை