உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவனை கடத்தி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்; டிரைவரை மடக்கியது கோவை போலீஸ்!

சிறுவனை கடத்தி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்; டிரைவரை மடக்கியது கோவை போலீஸ்!

கோவை: ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டி சிறுவனை கடத்திச் சென்ற டிரைவரை பவானியில் கோவை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.இதுபற்றிய விவரம் வருமாறு; கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். கட்டுமான தொழில் செய்து வருபவர். இவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக டிரைவராக நவீன் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.இந்நிலையில், சம்பவத்தன்று, ஸ்ரீதரின் 10 வயது மகனை நவீன் எப்போதும் போல் டியூசனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மகனும், அவரை அழைத்து வரச்சென்ற டிரைவர் நவீனும் வீடு திரும்பவில்லை.இதனால் குழப்பம் அடைந்த ஸ்ரீதர், தமது செல்போன் மூலம் நவீனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். அதில் எவ்வித பலனும் இல்லாமல் போனது. சிநிது நேரத்தில், ஸ்ரீதருக்கு போன் செய்த நவீன், மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால் மகனை விடுவிப்பதாகவும் மிரட்டி உள்ளார்.அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் மற்றும் அவரது கிருத்திகா ஆகியோர் போலீசின் உதவியை நாடியுள்ளனர். துரிதமாக களத்தில் இறங்கிய போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். பவானியில் பதுங்கியிருந்த நவீனை கைது செய்த போலீசார், சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ