உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்

செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும், இம்மாத இறுதியில் திறக்க அரசு தரப்பில் நிர்ப்பந்திப்பதால், நெருக்கடிக்கு இடையே அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர்.கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. 2024 அக். 6ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, 2025 ஜூனில் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.போதுமான நிதி ஒதுக்காததால், தாமதமாகி வந்தது. கூடுதல் நிதி கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில், உலக புத்தொழில் மாநாட்டை துவக்கி வைக்க, அக். 9ல் வந்திருந்த முதல்வர், 'செம்மொழி பூங்காவைஅடுத்த மாதம் (நவ.) திறந்து வைப்பேன்' என அறிவித்து விட்டார். ஆனால், பூங்கா பணிகள் இன்னும் முடியவில்லை.முதல்வர் அறிவித்து விட்டார் என்பதற்காக, வரும் 26ல் வேறொரு நிகழ்ச்சிக்கு கோவை வரும் சமயத்தில், செம்மொழி பூங்காவை திறந்து வைக்கலாம் என திட்டமிட்டு, இதுதொடர்பான அறிவிப்பை, நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார்.இன்னும் பணிகள் பாக்கியுள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.10 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதால், நெருக்கடிக்கு மத்தியில் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதற்கிடையே பூங்கா பணிகளை பார்வையிட அமைச்சர் நேரு நேற்று வந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும், சுற்றிப்பார்த்தனர். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதனன், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், பூங்கா சிறப்புகளை விளக்கினர். 'இன்னும் வேலை பாக்கியிருக்கு' நிருபர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், ''செம்மொழி பூங்காவை, இம்மாத இறுதியில் முதல்வர் திறந்து வைப்பார்; தேதியை முதல்வர் முடிவு செய்வார். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளன. இதற்காக ரூ.167.25 கோடி ஒதுக்கப்பட்டது. கூடுதலாக ரூ.47 கோடி கோரப்பட்டது. மொத்தம், ரூ.214.25 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை வழங்கப்படும். 1,000 வகையான ரோஜாக்கள் உள்ளன. வேறென்ன செம்மொழி பூங்காவில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vasan
நவ 16, 2025 21:44

இந்த பூங்காவுக்கு G.D.NAIDU பெயர் சூட்டப்பட்ட வேண்டும்.


sundarsvpr
நவ 16, 2025 20:40

ஒவ்வொரு வீடும் பூங்கா மாதிரி இருந்தது வீட்டில் கொல்லையில் பயிர் குழி தோட்டம் மரங்கள் பூச்செடிகள்இருந்தன. அப்போது வீடுகளே செம்மொழி பூங்கா. ஒவ்வொரு வீட்டிற்கும் கிணறு இருந்தது. வீட்டில் உபயோகப்படுத்தி மீதம் தண்ணி தோட்டம் பயிர்க்குழிக்கு போகும் வாசலில் வாளியில் நீர் இருக்கும் வெளியில் இருந்து வருபவர்கள் கால் அலம்பி வீட்டிற்க்குள் நுழைவார்கள். சுத்தம் சுகம் தரும். சோறு போடும். செம்மொழி பூங்கா இருக்கட்டும். இது வயதானவர்களுக்கு நடை பயிலவும் மாலையில் குழந்தைகள் விளையாட உபயோகப்படுத்தலாம் உடல் நலம் செம்மையாய் இருக்கும்.


N S
நவ 16, 2025 20:20

முன்பு அவரது தந்தை செய்தது போல தன்னிகரில்லா திராவிட மாடல் அப்பா செட் போட்டு திறந்துவிடவேண்டியதுதான்.


Sun
நவ 16, 2025 19:13

தமிழர்களுக்கு ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள் தரும் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட கம்பெனிகள் கூட வேறு மாநிலங்களுக்கு பறந்து போய் கொண்டிருக்கின்றன. நாம் இன்னும் இது போன்ற அவசர பூங்காக்கள் அமைப்பதைக் கூட ஏதோ புதிதாக அணை க்கட்டு கட்டுவது போல் பில்டப் கொடுப்பதில் இருந்து எப்போதுதான் மாறப் போகிறோமோ தெரியவில்லை!


Anantharaman Srinivasan
நவ 16, 2025 18:53

தர்மபுரி பாலக்கோட்டில் மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள் இன்றயசெய்தி. செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: சீக்கிரம் முடிக்க அதிகாரிகளுக்கு நெருக்கடிக்கு. ஏன் அந்த அவசரத்தை பள்ளி வகுப்பறைகள் கட்ட காட்டுவதில்லை. விளம்பரம் தரும் திட்டங்களுக்கே செலவிடும் விளம்பர பிரியர்களின் அரசு.


ManiK
நவ 16, 2025 18:33

செம்மொழி பூங்காவிலும் தாமரை மலரும். படத்தில் இருப்பதை பார்த்தால் பாலைவனம் மாதிரி இருக்கு...என்ன கண்றாவியோ!!


GMM
நவ 16, 2025 18:27

செம்மொழி , கனி மொழி பூங்கா மாநிலம் முழுவதும் வேலை இல்லாதவர் ஓய்வு பெற அவசியம். பெற்ற வேலை இழப்பு? போலி அண்ணா கழக பொறியியல் பட்டம் 69 இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு மூலம் வாங்கி நாடு, உலகம் முழுவதும் சென்ற திறனற்ற திராவிட குழுக்கள் திருப்புகிறது. ஓட்டு போட உதவும்.


kannan sundaresan
நவ 16, 2025 16:58

1000 வகை ரோஜா மலர் பூங்கா என பெயர் வையுங்கள் திரு.அமைச்சர் அவர்களே.


Barakat Ali
நவ 16, 2025 16:51

ஆட்சி தொடருமா என்கிற சந்தேகம் துக்ளக்காருக்கே வந்துருச்சு ......


கடல் நண்டு
நவ 16, 2025 16:38

குழந்தைகளைகளுக்கு பள்ளி கட்டடம் இல்லாமல் கோயிலில் இருந்து படிக்கிறார்கள் .. இந்த நிலையில் இது தேவையா??


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ