உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை லாட்டரி வியாபாரியிடம் ரூ.2.25 கோடி சிக்கியது!

கோவை லாட்டரி வியாபாரியிடம் ரூ.2.25 கோடி சிக்கியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையைச் சேர்ந்த லாட்டரி வியாபாரியிடம் 2.25 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, பாலாஜி நகரின் சென்னியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(42). திருமணமாகவில்லை. தாயாருடன் வசித்து இவர், கேரளாவில் லாட்டரிக் கடையில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=23rhhg38&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்களை பிடிக்கும்படி மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்காக எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனடிப்படையில், பொள்ளாச்சி,வால்பாறை, அன்னூர் மற்றும் கருமத்தம்பட்டி உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடத்தினர்.இச்சோதனையில், ரூ.2.5 கோடி ரொக்கம், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகள் 1,900 பறிமுதல் செய்யப்பட்டன. ரொக்கப்பணத்தில் ரூ.2 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் நோட்டுக்கட்டுகள் இருந்தன. இதனையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.நாகராஜிடம் நடத்திய விசாரணையில், லாட்டரிக்கடையில் காசாளராக பணியாற்றுவதுடன் இல்லாமல், கோவை மற்றும் திருப்பூரில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை அவர் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவினாசி மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் தலா 3 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Abbas Abbas
டிச 26, 2024 19:16

முதலில் மது கடைகளை ஒழித்தார்கள் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து மது கடைகளை அரசே ஓபன் செய்தது.அது போன்று இந்த லாட்டரி சீட்டுகள் இருக்கும் வரை மக்களிடம் ஓரளவு பணப் பழக்கம் இருந்து கொண்டு தான் இருந்தது.ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் லாட்டரி டிக்கெட் உள்ள போது அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்தது. அதன் மூலமாக சில குடும்பங்கள் வாழவும் செய்தது.ஆகவே இவர்களால் முற்றிலுமாக இந்த டிக்கெட்டுகளை ஒழிக்க முடியவில்லை.ஆகவே அரசாங்கமே மீண்டும் இந்த லாட்டரி டிக்கெட் விற்பனையை ஆரம்பிக்கலாம். தமிழ்நாட்டு உடைய வருமானம், தமிழ்நாட்டினுடைய பணம் வெளி மாநிலத்திற்கு செல்லாது.மற்றபடி எக்காரணத்தைக் கொண்டும் இந்த குற்றங்களை தடுக்க இயலாது இந்த டிக்கெட்டுகள் மீண்டும் சட்டப்பூர்வமாக அரசாங்கம் கொண்டு வந்தால் பலருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரமும் நாடு முழுவதும் சுற்றும். சிந்திக்க வேண்டும்


Rpalni
டிச 25, 2024 10:51

ஆதவுக்கு ஆப்படிக்க ஆரம்பிச்சாச்சு


R.RAMACHANDRAN
டிச 25, 2024 08:36

லாட்டரி சீட்டுக்கு தடை விதித்ததால் கள்ளத்தனமாக விற்று கோடி நாக்கில் சம்பாதிக்கின்றனர். மது விளக்கு அமல்படுத்தினால் கள்ள சாராயம் விற்று சம்பாதிப்பர்.காவல் துறையில் உள்ள குற்றவாளிகளுக்கு கப்பம் குவியும்.நேர்மையானவர்களை காப்பாற்ற காவல் துறை இல்லை.ஏனெனில் AVARGALAAL அவர்களுக்கு ஆதாயம் இல்லை.குற்றவாளிகளை காப்பாற்றி ஆதாயம் அடைகின்றனர்.


Arul Anandhkumar.S
டிச 25, 2024 08:10

என்ன சோதனை நடத்தி என்ன பிரயோஜனம் சோமனூர் அண்ட் சாமலாபுரம் பகுதியில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது அதுவும் சாமலாபுரத்தில் செக் போஸ்ட் அருகிலேயே உட்கார்ந்து எழுதுகிறார்கள்


N.Purushothaman
டிச 25, 2024 06:44

தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு ஆட்சி நடக்கிறது.. சமூக விரோதிகள் முதற்கொண்டு யாருக்கும் தப்பு எய்தாள் கண்டிக்கப் படுவோம் என்கிற அச்சம் என்பது சிறிதும் இல்லை ....


D.Ambujavalli
டிச 25, 2024 06:11

விற்பனையாளரிடம் ந்த 2 1/2 கோடியும், சீட்டுகளும் பிடித்து வீரம் காட்டிய படை, ஆயிரம் கோடிகள் பக்கம் திரும்ப மாட்டார்கள் எத்தனை ஜாபர்களோ ?


சம்பர
டிச 25, 2024 03:31

தடை இன்றி கிடைக்கு து


arasiyal kelvi tv
டிச 25, 2024 00:16

அரசு தடை செய்யும் அனைத்துமே போலீசாருக்கு ஆதாயம் தான் தமிழ் நாட்டில் லாட்டாரியில் அழியும் மக்களைவிட மதுவால் அழியும் மக்களே அதிகம் சிந்திக்குமா தமிழக அரசு


சமீபத்திய செய்தி