உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளுக்கு புரியும் மொழி; பேசிப்பார்த்த கோவை போலீஸ்: நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்!

ரவுடிகளுக்கு புரியும் மொழி; பேசிப்பார்த்த கோவை போலீஸ்: நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; கோவையில் பிரபல ரவுடியான ஆல்வின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடிகள் கொட்டம்

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் ரவுடிகள் கொட்டம் ஒடுக்கப்படும், அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற என்கவுன்ட்டர்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், ரவுடிகள் கொட்டம் அடங்க ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது, சென்னையை பின்பற்றி கோவை காவல்துறை பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளது. https://www.youtube.com/embed/GkWtdNIEChQ

13 வழக்குகள்

இதுபற்றிய விவரம் வருமாறு; நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆல்வின். பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 13 வழக்குகள் காவல்துறை ரெக்கார்டுகளில் பதிவாகி உள்ளன. கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடுரோட்டில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தில் தொடர்பு உள்ள ஆல்வினை பிடிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ரகசிய தகவல்

இந்நிலையில் கொடிசியா பகுதியில் ரவுடி ஆல்வின் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்றனர். போலீசார் சூழ்ந்துவிட்டதை உணர்ந்த ஆல்வின், தான் வைத்திருந்த கத்தியால் காவலர் ராஜ்குமார் என்பவரை வெட்டி உள்ளார்.

குண்டு பாய்ந்தது

இடது கையில் வெட்டுக்காயம் ஏற்படவே சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளார். ஒரு குண்டு காற்றில் பறக்க, மற்ற 2 குண்டுகள் ரவுடி ஆல்வினின் 2 கால்களையும் துளைத்தது. குண்டுகாயங்களுடன் ஓட முடியாமல் சிக்கிக் கொண்ட ஆல்வினை பிடித்த போலீசார், பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S. Gopalakrishnan
செப் 21, 2024 12:31

ரௌடியைப் பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே போலீஸார் தனிப்படை அமைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.


Apposthalan samlin
செப் 21, 2024 10:53

மார்பில் சுட்டு பிடித்து இருக்கலாம் வாழ் நாள் wheel chair தான்


Shekar
செப் 21, 2024 12:16

வாழ்நாள் வீல் சேர்தான் நல்லது. திருடுபவன், கொலைகாரன், கூலி படை போன்ற ரவுடிகளுக்கு கை அல்லது காலை இயங்காமல் செய்வதுதான் நல்ல தண்டனை


Kanns
செப் 21, 2024 10:10

Another Fake Encounter But Never against Ruling Party Conspiring Goondas. Slap Attempt to Murder Charges against All Concerned Police incl Commissioner DGP Home Secretary-Minister for Misusing Powers /Law And Not Fast-Tracking Cases against him. Abolish Superior Police-Courts Not Punishing Power-Misusing Rulers, Stooge Officials esp police, magistrates & Vested False Complainant Gangs women, SCs, Unions/groups, advocates etc


raja
செப் 21, 2024 09:57

பயங்கரவாதிகள் ரவுடிகள் அனைவரும் வந்தேறி ஆபிரகாமியதினராக இருப்பது யேன்..


Indian
செப் 21, 2024 14:27

பயம்


Dharmavaan
செப் 21, 2024 09:39

இதை அரசியல் ரௌடிகளுக்கும் செய்ய வேண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற ஈன ஜந்துக்களை சுட்டுத்தள்ள வேண்டும்


பாமரன்
செப் 21, 2024 09:34

....ரவுடிகள் கொட்டம் அடங்க ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.... இதெல்லாம் சொல்லப்பிடாது ஸார்வாள்... பகோடாஸ் கோச்சுப்பா...


Shekar
செப் 21, 2024 12:18

பொய் சொன்னா கோவிக்க தானே செய்வாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை