உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் விபரீதம்; அதிகாரிகள் அதிர்ச்சி!

கோவை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் விபரீதம்; அதிகாரிகள் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; கோவை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக கூறிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், அடுத்தடுத்து போலீசார் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zb35zwmx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும், ஸ்டேஷன் முதல் மாடியில் இருக்கும் எஸ்.ஐ., அறையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளா்.இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவர் (உயிரிழந்தவர் பெயர் ராஜன்) என்னை 25 பேர் துரத்துகின்றனர் என்று சொல்லி காவலரிடம் கூறுகிறார். உடனே காவலரும் வெளியே வந்து பார்க்கிறார். யாரும் இல்லை என்றவுடன் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று காவலர் அவரை அனுப்பிவிட்டு ஸ்டேஷன் உள்ளே சென்றுவிடுகிறார்.அலுவல் காரணமாக ஸ்டேஷனில் போனுக்கு பதிலளிக்க வந்துவிடுகிறார். அந்த இடைவெளியில், ஸ்டேஷனுக்குள் புகுந்த அந்த நபர், மாடிப்படியேறி குற்றப்பிரிவுக்கு சென்று விடுகிறார். அங்கு எஸ்ஐ(க்ரைம்)அறையில் தற்கொலை செய்து கொள்கிறார். காலையில் ரோல்கால்(Roll call) முடித்துவிட்டு க்ரைம் எஸ்ஐ மேலே சென்று அறையை திறக்க முயற்சிக்கிறார். அப்போது உள்ளே யாரோ இருப்பதாக எண்ணி கொஞ்சநேரம் காத்திருக்கிறார். அதன்பிறகு அவர் கதவை பலமாக தட்டி பார்க்கும் போது உள்ளே ஒருத்தர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடுத்தியிருந்த வேட்டியை பயன்படுத்தி காற்றாடியில் தொங்கியபடி தற்கொலை செய்திருக்கிறார்.சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவார். பின்னர் தற்கொலை செய்தவர் யார் என்று சிசிடிவியை வைத்து அடையாளம் காணும்போது, அந்த குறிப்பிட்ட நபர், ஒரு பஸ்சில் வந்து இறங்குகிறார். பின்னர் டவுன்ஹாலில் இரவு 11 மணிக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்கிறார். அதன் பிறகு அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு 11.19 மணிக்கு வருகிறார். பின்னரே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அவரது பாக்கெட்டில் உள்ள டைரியில் உள்ள நம்பரில் சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து பேசும் போது, இறந்தவர் ராஜன் என்கிற அறிவொளி ராஜன். அவரின் ஊர் பேரூர் அருகில் உள்ள சாமிசெட்டிபாளையம். அவர் குடும்பத்தினரிடம் விசாரித்த போது, மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார். 10 பேர், 20 பேர் துரத்துகின்றனர் என்று கூறி உள்ளதாக தெரிவித்தனர். தற்போதுள்ள நிலவரப்படி சடலம் அரசு மருத்துவமனையில் உள்ளது.மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவார். உதவி கமிஷனர் விசாரணை மேற்கொள்வார். இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் யாரெல்லாம் கவனக்குறைவாக இருந்துள்ளனரோ, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் தொடர்புடையை சிசிடிவி காட்சிகள் விசாரணையில் உள்ளது. அவற்றை புலன் விசாரணை அதிகாரி பார்ப்பார். இறந்தவர் என்ன வேலை செய்கிறார் என்பன உள்ளிட்ட விசாரணைகள் இனிமேல் தான் நடத்தப்படும்.தற்போதைக்கு இதுதான் போலீசுக்கு கிடைத்துள்ள தகவல்கள். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வர உள்ளனர். தான் கட்டிய வேட்டியில் அவர் தூக்கு மாட்டிக் கொண்டிருக்கிறார். சம்பவம் நடக்கும் போது காவலரை தவிர யாரும் அங்கு இல்லை.பணியில் கவனக்குறைவாக உள்ள எல்லோரையும் உஷார்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ராஜன் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது இதுவரை தெரியவில்லை. விசாரித்த பின்னரே அதுவும் தெரிய வரும்.இந்த சம்பவம் லாக்அப் டெத் என்று சொல்ல முடியாது. இது போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தற்கொலை. ஸ்டேஷனுக்கு கதவு இல்லை. பொதுமக்கள் வரவேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருக்கலாம். அதையும் இப்போது சரிசெய்து மாட்ட சொல்லி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Durai Kuppusami
ஆக 07, 2025 09:11

அவர் உள்ளே வரும்போது லுங்கி போல் தெரிகிறது


D.Ambujavalli
ஆக 06, 2025 16:34

அவர் இப்படி ஒரு புகாருடன் வரும்போதே அவர் பதட்டத்தை உணர்ந்து விசாரித்து, குடும்பத்தினரை அழைத்து நிலவரத்தைக் கூறி இருக்கலாம். அவரை அனுப்பி வைத்தபின் மறுபடி உள்ளே வந்து மாடிக்குப் போகும் வரை கவனிக்காமல் எப்படி விட்டார்கள்? ஏற்கெனவே custody deaths அமர்க்களங்கள் கிளம்பும் நிலையில் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கலாமா? Post mortem என்ன வருகிறதோ, யார் யாருக்கு கத்தி தலைமேல் தொங்குகிறதோ ?ஒருவர் நுழைவது கூடத் தெரியாமல் அப்படி ஒரு சுவாரஸ்யமான போன் பேச்சு எங்கு கொண்டு விட்டிருக்கிறது ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 06, 2025 16:02

அதெப்படிங்க? ஊர்ல இருக்கற எல்லா இடத்தையும் விட்டுட்டு பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், ராத்திரி 11:30 மணிக்கு எஸ்எஸ்ஐ ரூமை தேடிவந்து, அதுவும் பேரூர் சாமிசெட்டிபாளையம் பகுதியில் இருந்து பஸ் பிடிச்சு வந்து தூக்கு மாட்டி செத்தாரு? வீடியோவில் அந்த நபர் ஒரு கட்டம்போட்ட பச்சை கலர் லுங்கியுடன் நடமாடுகிறார். ஆனால் வெள்ளை வீதியில் தூக்கு மாட்டிக்கொண்டு செத்தார் என்று போலீஸ் சொல்கிறது. இங்கு யாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது?


sridhar
ஆக 06, 2025 15:12

கதை , திரைக்கதை , வசனம் , direction - கமிஷனர்.


David DS
ஆக 06, 2025 14:39

கதை சொல்லலாம் ஆனா மிஷ்கின் ரேஞ்சுக்கு சொல்றீங்களே


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 06, 2025 14:06

காவல் நிலையத்துக்கு கதையில் பல இடங்களில் ஓட்டை இருக்கிறது. பாவப்பட்ட மனுஷன் கட்டி இறந்தது வேஷ்டியா கைலியா ? காவல் நிலையத்துக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்துவிட முடியுமா? மக்கள் தொடர்பான அறைகள் தரைத்தளத்தில் இருக்கும்போது மாடிக்கு செல்பவரை அதுவும் அறிமுகம் இல்லாதவரை காவல் நிலையத்துப் பணியாளர்கள் யாருமே, யார் எதற்கு என்ன என்று கேட்கவே மாட்டார்களா? அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் சற்சஸ்டிக் சாதாரணமாக காவல் நிலையத்திற்குள் ஏங்கும் வேண்டுமானாலும் சென்று வர முடியுமா? எப்படியோ திருப்புவனத்துக் காவக்காரங்களுக்கு எழுந்தது தெரியாத கதையை கோயம்புத்தூரு காவக்காரங்க எழுதிப்புட்டாங்க.


Padmasridharan
ஆக 06, 2025 13:26

பணியில் கவனக்குறைவாக இருப்பவர்களா இவர்கள், கண்டிப்பாக இல்லை சாமி. சட்டத்தின் sections ஐ தெரிந்து வைத்துக் கொண்டு மக்களை அநாகரிகமாக பேசி பணம்/பொருள் புடுங்கும் பாதகங்கள் சரியாக செய்து வருவது அவரவர்களுக்கே தெரியும். மக்களை பாதுகாக்கத்தான் இவர்கள் என்பதை மறந்து பலரும் அந்த காக்கி உடையின் மரியாதையை கெடுத்துக் கொண்டுள்ளனர். CCTV என்பது குற்றங்களை நடக்காமல் தவிர்க்க வேண்டுமே தவிர குற்றம் நடந்த பின்னர் குற்றவாளியை பிடிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் இவர்களின் பேச்சால் தற்கொலைக்கு பொது இடங்களில் முயற்சித்துள்ளனர். இவர் காவல் நிலையத்திலேயே நடத்திவிட்டார் அவ்வளவுதான் வித்யாசம்.


Ramesh Sargam
ஆக 06, 2025 13:19

அவர் கட்டியிருந்தது லுங்கி. ஆனால் போலீஸ் கமிஷனர் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை என்று கூறி உள்ளார்.


lana
ஆக 06, 2025 13:05

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது. இப்படி க்கு சாராய வியாபாரி களின் முதல் முந்திரி


Senthoora
ஆக 06, 2025 17:40

அப்போ உ பியில் போலி நீதிமன்றம், போலி தூதரகம், போலி மருத்துவமனை, இதெல்லாம் கேட்கமாட்டீங்க நல்ல சங்கிகளுக்கு சிங்கி அடிங்க.


T.S.Murali
ஆக 06, 2025 19:48

செந்தூர அந்த சிங்கிங்க கத்துக்கிட்டதே உங்க திருட்டு திராவிடத்தும் தான்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 06, 2025 12:17

சிறந்த கதை போலீஸ் ஸ்டேஷன்ல தான் எழுதப்படுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.


சமீபத்திய செய்தி