உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூகுள் பே, போன் பே மூலம் லஞ்சப்பணம் வசூல்; கோத்தகிரி லஞ்ச ஒழிப்பு சோதனையில் அம்பலம்!

கூகுள் பே, போன் பே மூலம் லஞ்சப்பணம் வசூல்; கோத்தகிரி லஞ்ச ஒழிப்பு சோதனையில் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் அதிகாரிகள் ஜிபே, போன்பே மூலம் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.கோத்தகிரியில் நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அனுபோக சான்று உள்ளிட்டவை பெறுவதற்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், 24ம் தேதி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக கதவுகளை மூடிய அதிகாரிகள், தாசில்தார், வி.ஏ.ஓ.,கள், அலுவலக ஊழியர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.சோதனையின்போது, கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) கமல் என்பவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம், ஜெகதளா -1 வி.ஏ.ஓ. நவீன்குமாரிடம் இருந்து ரூ.4,200 பறிமுதல் செய்யப்பட்டது. இவை கணக்கில் வராத பணம்.மேலும், தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர்கள், வி.ஏ.ஓ.,க்களின் மொபைல்போன்கள் வாங்கி அதில் இருந்து ஜிபே, போன்பே, வாட்ஸ் ஆப் செயலியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

தாசில்தார் கோமதி, ஜிபே மூலம், ஜூன் 6 முதல் அக்., 11 வரை ரூ.4,91,000 லஞ்சம் பெற்றதற்கான 33 பதிவுகள் இருந்தன. இவருக்கு மதுரையில் எஸ்.பி.ஐ., கிளையிலும், கனரா வங்கியிலும், இந்தியன் வங்கியிலும் சேமிப்பு கணக்கு உள்ளது.துணை தாசில்தார் எல்.கே.உமா மகேஸ்வரி, போன் பே மூலம் மே 30 முதல் செப்., 24 வரை வங்கிக்கணக்கிற்கு வெவ்வேறு நபர்களிடம் இருந்து ரூ.1,28,000 லஞ்சப்பணம் பெற்றதற்கான பதிவுகள் இருந்தது.கோத்தகிரி 2 வி.ஏ.ஓ., கமல், போன்பே மூலம் ஜூன் 10 முதல் அக்.,08 வரை ரூ.22,800 லஞ்சம் வாங்கியதற்கான பதிவுகள் இருந்தது.அரக்கோடு, கொக்கோடு வி.ஏ.ஓ., பிரியா, ஜிபே மூலம் ஜூன் 22 முதல் அக்.,19 வரை இவரது வங்கிக்கணக்கிற்கு வெவ்வேறு நபர்களிடம் இருந்து ரூ.54,750 லஞ்சம் பெற்றதற்கான பதிவுகள் இருந்தது.இந்த தகவல்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து விசாரணைக்கு அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். மேலும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Indhuindian
அக் 27, 2024 12:11

கரை படாத கைகளாக்கும்


kulandai kannan
அக் 27, 2024 12:10

பிணந்தின்னும் கழுகுகள்.


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 10:36

என்ன புண்ணாக்குகளோ


VENKATASUBRAMANIAN
அக் 27, 2024 08:11

பெண்கள் முன்னேற்றம் இதுதான் போலும். சம உரிமை பெற்றுள்ளார்கள்.


Mani . V
அக் 27, 2024 06:45

அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்பம் யாருக்குப் பயன்படுதோ இல்லையோ, இது போன்று சமூக விரோதிகளுக்கு பயன்படுகிறது. இது போன்ற தேச விரோத சக்திகளை பாரபட்சம் பார்க்காமல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.


KRISHNAN R
அக் 26, 2024 20:43

டெக்னாலஜி..இம்ப்ரூவ்டு சோ மச்.....


Anantharaman Srinivasan
அக் 26, 2024 20:28

ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதமென்பதுபோல் ஒருநாள் ரெய்டு விட்டு பிடித்தால் போதாது. இவர்கள் தினமும் லட்சக்கணக்கில் வாங்குவது ஊருக்கே வெளிச்சம். மேல் மட்டம் வரை பாய்கிறது என்பதை அனைவரும் அறிவர்.


Selvarajkj
அக் 26, 2024 20:15

எல்லா பக்கமும் நடக்கறதுதானே ?


Selvarajkj
அக் 26, 2024 20:12

இது 50 வருசமா இருக்குற ஒன்னுதான் மீடியாவுக்குப் புதுசு அவ்ளோதான்


Indhuindian
அக் 26, 2024 20:05

டிஜிட்டல் இந்தியா...!


சமீபத்திய செய்தி