உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றவியல் சட்டப்படி கடும் நடவடிக்கை: நெல்லையில் குப்பையை கொட்டியவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

குற்றவியல் சட்டப்படி கடும் நடவடிக்கை: நெல்லையில் குப்பையை கொட்டியவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருநெல்வேலி: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து நெல்லையின் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர். நேற்று முன்தினம் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் கேரளாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கே.பி.கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக வந்த புகார்கள் தொடர்பாக மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலம் அந்த கழிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பையை கொட்டியவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bhakt
டிச 18, 2024 00:13

கேரளா: எங்களையும் சேர்த்து தானே திராவிட நாடு. திராவிட நாட்டுக்குள்ள தானே நாங்க கொட்டினோம்.


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:20

எல்லையில் இருந்த சோதனை சாவடி வீரர்களை அனுப்பி இந்த குப்பைகளை அகற்ற வையுங்க , அப்புறம் எந்த மல யாளி இதனை அனுப்பியது என்பதனை அறியலாம்.


RADHAKRISHNAN
டிச 17, 2024 17:15

நமது நடவடிக்கைதான் நாம் அறிந்ததே, எல்லையில் சோதனைச்சாவடி ஊழியர்களை மொத்ததாக வீட்டிற்க்கு அனுப்பவேண்டும். தமிழ்நாட்டில் இங்குதான் காசுகொடுத்தால் என்னவேண்டுமானாலும் கிடைக்குமே, தமிழன் என்ற சொல்லடா காசுக்காக திரும்பி நில்லடா


Gokul Krishnan
டிச 17, 2024 16:53

தமிழ்நாடு சபாநாயகர் தொகுதியில் இந்த அவலம் ஆனால் எங்க முதல்வருக்கு கேரளா போய் சிலை திறக்க நேரம் உள்ளது இதை பற்றி எல்லாம் பேச நேரம் இல்லை


SADHIK ADAM
டிச 19, 2024 13:56

இது சபாநாயகர் தொகுதி இல்லை. பீசப்பி தொகுதி எம்எல்ஏ திரு நயினார் நாகேந்திரன்


சம்பா
டிச 17, 2024 15:50

உள்ளூர் மக்களிடம் விட்டு விடு தடுக்க படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை