உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நான்கு மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று (மார்ச் 07) தீர்ப்பு அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை அறிவித்தார்.கோவை, பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ., 2ம் தேதி இரவில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8gue6vi0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் மீது, டிச., 3 ல், முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, டிச., 19 ல் கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. ஜன., 9ல், 220 பக்கம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜன., 29 ல் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டு, பிப்., 2ல் சாட்சி விசாரணை துவங்கியது.பிப்., 23 ல் சாட்சி விசாரணை நிறைவு பெற்றது. பிப்., 24 ல் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா, இறுதி வாதத்தை முன்வைத்தார். எதிர் தரப்பில் இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். அதன்படி மதியம் 3 மணி அளவில் தண்டனை விபரங்களை அவர் வெளியிட்டார். குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். கோவை மாணவி பாலியல் வழக்கின் தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் ஜிஷா பேட்டி: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் என்ற தண்டனையை நீதிபதி விதித்துள்ளார். விசாரணை அதிகாரிகளின் விசாரணையை நீதிபதி பாராட்டினார். மொத்தத்தில் 72 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தினத்தில் குற்றவாளிகள் மாணவியுடன் வந்த நபரை தான் முதலில் தாக்கி உள்ளனர். பின்னர் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.டிஎன்ஏ பரிசோதனை, மாணவியின் நண்பரை வெட்டிய இடத்தில் கிடைத்த தடயங்கள், கைரேகை விவரங்கள் என அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். பாதிக்கப்பட்ட பெண், ஆண் நண்பரை பற்றியும் பலவிதமாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. அனைத்தும் தவறானவை. அவர்கள் இருவரும் காதலர்கள். இருவரின் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம்.குற்றவாளிகள் 3 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. போலீசார் இனி இதுபற்றி விசாரணையை நடத்துவார்கள். இவ்வாறு வக்கீல் ஜிஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Keshavan.J
மார் 07, 2026 21:51

எலெக்ஷன் மட்டும் வரவில்லை என்றாள் இவனுகளுக்கு தண்டனை இவ்வளவு சீக்கிரம் கிடைத்து இருக்காது. இந்த தீர்ப்பு தீய சக்திக்கு சாதகமாக போகும்


N.Purushothaman
மார் 07, 2026 20:45

இவனுங்களை பார்த்தால் ஆளும் கட்சி கவுன்சிலர், வட்ட செயலர் , வார்டு உறுப்பினர் மாதிரி இருக்கானுங்களே ...


Rameshmoorthy
மார் 07, 2026 20:10

Why we feed them??? Give them capital punishment


Anantharaman Srinivasan
மார் 07, 2026 20:03

இதுபோல் எல்லா பாலியல் வழக்குகளையும் விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும்.


அப்பாவி
மார் 07, 2026 19:19

ஆயுள் தண்டனையின் ஆயுள் அடுத்த நொண்ணா பிறந்தநாள் வரைதான். நன்னடத்தை காரணமாக விடுதலை ஆயுடுவாங்க. நல்லவங்களாயிடுவாங்க கோவாலு. கர்ம பூமி நம்மளது.


C.SRIRAM
மார் 07, 2026 17:43

வேதியல் பொருட்களை உபயோகித்து நிரந்தர ஆண்மை நீக்கம் செய்து சிறையில் அடைக்கவேண்டும் அதுவும் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுக்கப்படவேண்டும்


Rameshmoorthy
மார் 07, 2026 17:36

These barbarian should be hanged to teach lesson to other offenders


முருகன்
மார் 07, 2026 16:55

உடனடியாக தண்டனை நிறைவேற்ற வேண்டும் சாகும் வரை எதற்கு ஆயுள் தண்டனை மக்கள் வரிப்பணம் விரையம்


Chinnappan Arulappan
மார் 07, 2026 17:58

மரண தண்டனை.. பொதுவெளியில்


Thravisham
மார் 07, 2026 16:29

கும்மிருட்டில் பகலும் இரவு போல் இருக்கும் கொடும் தனிமை சிறையே சரி.


Sudha
மார் 07, 2026 16:26

அப்படி என்னதான் இவங்களுக்கு ஆதரவாக வாதிட்டார்கள், கொஞ்சம் விசாரிச்சு எழுதுங்க, நாலு பேருக்கு உபயோகப்படும் இல்ல


முக்கிய வீடியோ