வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இரண்டு தரப்பிலும் குடி விளையாடியதா என்று பார்க்க வேண்டும். அது இல்லையென்றால் ரோடு கண்டிஷன், அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது .
மயிலாடுதுறை: சீர்காழி அருகே லாரி மோதிய விபத்தில் டூவீலரில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பலியானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம், 21; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் 23 ஆகிய இருவரும் புத்தூரில் உள்ள பொன்மனச் செல்வர் புரட்சிக் கலைஞர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு பயின்று வருகின்றனர். கல்லூரியில் நெருங்கிய தோழர்களான இருவரும் சேர்ந்து கல்லூரிக்கு வருவதும் திரும்பிச் சொல்வதும் வழக்கம். அதுபோல இன்று கவரப்பட்டு கிராமத்தில் இருந்து ஹோண்டா சைன் டூவீலரில் வந்த செல்வம் கொள்ளிடத்தில் புவனேஷை அழைத்து கொண்டு கல்லூரி நோக்கி சென்றுள்ளனர். அப்போது எதிரே மயிலாடுதுறையில் ஜல்லி இறக்கிவிட்டு புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய புவனேசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் கந்தன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த கல்லூரி தோழர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தரப்பிலும் குடி விளையாடியதா என்று பார்க்க வேண்டும். அது இல்லையென்றால் ரோடு கண்டிஷன், அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது .