உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருநை, கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பாருங்கள்: பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் அழைப்பு

பொருநை, கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பாருங்கள்: பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தில் கட்டியிருக்கும் பொருநை, கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திருநெல்வேலியில் ரூ.356 கோடி புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நெல்லையின் அடையாளமாக விளங்கும் நெல்லையப்பர் கோவிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொண்டவர் கருணாநிதி. அவர் வழியில், இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 1991ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த நெல்லையப்பர் கோவில் தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் நெல்லையப்பர் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும்.

தனித்துவமானது

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பெருமிதத்துடன் நான் உங்கள் முன்னால் கம்பீரத்துடன் நின்று கொண்டு இருக்கிறேன். பொருநை தமிழர்களின் பெருமை. இந்திய துணைக் கன்டத்தின் வரலாறு, இனிமேல் தமிழ் நிலத்தில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும்.கீழடி, பொருநை என்று நமது வரலாற்று தரவுகளை உரக்க பேசி கொண்டு இருக்கிறோம். தமிழர்களின் பண்பாடு தனித்துவமானது. முற்போக்கானது. இந்திய துணைக் கன்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாக இருந்தது. அகழாய்வுகளுக்கு மத்திய பாஜ அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்தி கொண்டு இருக்கிறோம். அவர்களுடைய எண்ணம் என்ன?

தோற்கமாட்டோம்

தமிழர்களின் வரலாற்று தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் ஏதும் நடக்க கூடாது. மீறி நடந்தாலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளியில் வந்து விடக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட , தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுவதை எதிர்த்து தான், நாம் இன்றைக்கு உறுதியோடு எதிர்த்து போராடி கொண்டு இருக்கிறோம். இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடி தேடி அலைபவர்களுக்கு கண் முன் நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதுக்காக நாம் சோர்ந்து போய் விட முடியுமா? நம்முடைய கடமைகளில் இருந்து நாம் பின்வாங்க முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டு கொடுத்திட முடியுமா, நிச்சயம் முடியாது. 2 ஆயிரம் ஆண்டு கால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம்.

வாங்க பிரதமரே!

உரிமையோடு உங்கள் எல்லோரையும் பார்த்து கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் அருங்காட்சியங்களை பார்க்க வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க அறிவிப்பு வந்தது. அந்த பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது. இன்னும் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கவில்லை.உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தில் கட்டியிருக்கும் பொருநை, கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும். இந்த விழாவின் மூலமாக நான் அவர்களை அன்போடு அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால் தான், தமிழர்களின் நாகரிகத்தில் எந்தளவுக்கு தொன்மை இருக்கும் என்று தெரியும்.

நீக்கிவிட்டார்கள்

மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து, செய்து தரக்கூடிய மக்கள் ஆட்சியை நாம் நடத்தி கொண்டு இருக்கிறோம். இதற்கு நேர் மாறாக, மக்கள் விரோத ஆட்சியாக மத்திய அரசு நடந்து கொண்டு இருக்கிறது.இந்திய கிராமங்களின் உயிர்நாடியாக இருந்து பல கோடி ஏழை மக்களின் வறுமையை போக்கிய மஹாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை, இப்பொழுது பாஜ அரசு திட்டமிட்டு, முடக்கி இருக்கிறார்கள். மஹாத்மா காந்தி என்கிற பெயரையே நீக்கி, பெரும்பாலான மக்களுக்கு புரியாத ஹிந்தி பெயரை வைத்து இருக்கிறார்கள். காந்தியையும் பாஜவுக்கு பிடிக்காது. உலகம் முழுவதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கிற தேச தந்தை காந்தியின் பெயரையே இன்றைக்கு நீக்கி இருக்கிறார்கள். 100 நாள் திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே காலி பண்ணிவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை பல வழியில் நாசப்படுத்தினார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மத்திய அரசை சாடிய முதல்வர்!

மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மஹாத்மா காந்தி வேலைத்திட்டத்திற்கு மொத்தமாக மூடு விழா நடத்திவிட்டார்கள். ஏற்கனவே நிதி நெருக்கடி உருவாக்கி, நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்து, முடக்க பார்க்கிறார்கள். இப்பொழுது கூடுதல் சுமையை நம்ம தலையில் கட்டுகிறார்கள். 60 நாட்கள் வேலை ஏதும் வழங்கப்படாது என மாற்றம் செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் பாஜ அரசுக்கும் ஏழை மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கை கழுவி இருக்கிறார்கள். வரும் 24ம் தேதி 100 நாட்கள் வேலை திட்டத்தை நிறுத்துவதற்கு எதிராக திமுக தலைமையில் அமைந்து இருக்கும் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், தமிழகம் முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்து இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

போலி விவசாயி!

எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-ஐ முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடி பேசியதாவது: 100 நாட்கள் வேலைத்திட்டம் பற்றி ஏதும் பேசாமல் மூச்சு கூட விட முடியாமல் இருக்கிறார் போலி விவசாயி பழனிசாமி. உண்மையான விவசாயி என்கிறார். நான் தான் விவசாயி, நான் தான் விவசாயி என்று சொல்கிறார். இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே, விவசாயிகளின் உரிமையை பறிக்க, 3 வேளாண்மை சட்டத்தை பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. அப்போது பாஜவினருக்கு பழனிசாமி முட்டு கொடுத்தார். நியாயப்படுத்தினார். பாஜ சிஏஏ சட்டத்தை கொண்டு வந்த போது நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால் இந்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என மனசாட்சியே இல்லாமல் பழனிசாமி கூறினார். இந்த துரோக லிஸ்டில், கூடுதலாக 100 நாள் வேலைத்திட்டமும் சேர்ந்து இருக்கிறது. பாஜ அரசு பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் போது கூட, அதை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அநியாயத்திற்கு துணை போகும் செயலை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். மக்கள் சக்தியின் துணையோடு இந்த சட்டத்தையும் திரும்ப பெற வைப்போம், இது எங்களின் லட்சியம், என்றார்.

3 அறிவிப்புகள்

திருநெல்வேலிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு: 1. திருநெல்வேலி பேட்டை அரசு மகளிர் கல்லூரியில் ரூ.11 கோடியில் தங்கும் விடுதி கட்டப்படும். 2. முக்கூடல், பாப்பாக்குடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.4 கோடியில் கால்வாய் மேம்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படும். 3. ரூ.5 கோடியில் வள்ளியூர் பெரிய குளம், கால்வாய் புனரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்.

புதிய பஸ்கள்

முன்னதாக, பாளையங்கோட்டையில் அரசு போக்குவரத்து கழகத்தின் 15 புதிய பஸ்களை கொடி அசைத்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் 45,116 மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

பாலாஜி , சென்னை
டிச 22, 2025 00:09

மகாத்மா காந்திக்கு உத்தமர் காந்தி பெயர் மாற்றம் செய்தோர் யார்


ManiK
டிச 21, 2025 21:01

இப்படியாக புருடாவிட்டே இன்னும் 4 மாதத்தை ஓட்டி மக்களை குழப்பி தேவையில்லாத பெருமை ஆசைகாட்டினாலும் நெல்லையில் மோசம்போகப்போவது ஸ்டாலின் திமுகதான்.


Sun
டிச 21, 2025 17:57

பொருனையை மோடி பார்ப்பது இருக்கட்டும். இங்கே வயிற்றுக்காக போராடிக் கொண்டிருக்கும் செவிலியர்கள் எதிர்பார்ப்பது உங்கள் கருணையை . அவர்கள் மீது கருணை காட்டி விட்டு பின்னர் பொருனை பற்றிப் பேசுங்கள்.


bharathi
டிச 21, 2025 17:39

Dravida modela


vbs manian
டிச 21, 2025 16:52

தமிழகம் முழுதுமே அரும் காட்சிதான். தினமும் பார்க்கிறோம்.


GMM
டிச 21, 2025 15:41

ஶ்ரீரங்கம், திருச்சி கோவிலில் பக்தர் வரிசைக்கு குடிசை போன்று ஒழுங்கு இல்லாமல் மர கட்டை கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளது. தமிழக ஏராளமான கோவில்கள் பராமரிப்பு, முகவரி இல்லை? ஆனால் இந்து அறநிலைய துறை முகவரி உண்டு. தமிழகம் முழுவதும் சுற்றி பார்க்க சொல்லுங்கள். காமராஜ் ஆட்சி முன் கட்டப்பட்ட குல் தொழில் அறிந்த உழைக்கும் மக்கள் ஓட்டு, குடிசை, காரை வீடுகள் பழுது கூட பார்க்க முடியாமல் அப்படியே உள்ளன. ஆனால் திராவிட வீடுகள் அரண்மனை போல் இருக்கும். திராவிட இயக்கம் உழைக்கும் மக்களை வளர விடவில்லை. நம் தெரு, சாலைகளை கீழடி முன் சுற்றி காண்பிக்க வேண்டும்.


vivek
டிச 21, 2025 15:26

அங்கேயும் இரண்டு மூன்று டாஸ்மாக் கடைகள் திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


Rajah
டிச 21, 2025 15:18

தமிழர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழர்கள்தான். தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் தெலுங்கர்கள்தான். தெலுங்கர் ஒருபோதும் தமிழர்கள் ஆக முடியாது.


ஆரூர் ரங்
டிச 21, 2025 15:16

அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருந்த இடம் தெரியவில்லையாம். . ஆலயங்களின் சொத்தான லட்சம் ஏக்கருக்கு மேல் நிலங்களை காணவில்லை என அந்தத் துறையே ஒப்புக் கொள்ளவில்லையா?. கலைக்களஞ்சியங்களான நமது ஆலயங்கள் சிதிலமடைந்து கிடைக்கும் போது நாலு உடைஞ்ச சட்டி பானை ஓடுகள் குச்சிகளை வைத்து அருங்காட்சியகம் தேவையா? எல்லாவற்றிலும் கமிஷன் கரப்ஷன் மயம்.


sivaram
டிச 21, 2025 15:12

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ,இருட்டினில் நீதி மறையட்டுமே ,தன்னாலே வெளிவரும் தயங்காதே ,ஒரு சக்தி இருக்கிறாள் மறவாதே , ஏமாற்றாதே ஏமாற்றாதே , இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தமிழ் நாட்டினிலே , சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கின்றார்