உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46.சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா பட துவக்க விழா தளத்தில் ரத்த வாந்தி எடுத்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ni6qiwe0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தர்ம சக்கரம் படம் தொடங்கி, மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், தேசிங்குராஜா, புலி, விஸ்வாசம், இரும்புதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரோபோ சங்கர்.மதுரையை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார். அதனால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். பின்னர் தனியார் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் , கதை நாயகன் ஆக நடிக்க தயாராகி வந்தார். நவம்பரில் வர உள்ள கமல்ஹாசன் பிறந்த நாளை விமர்சை ஆக கொண்டாடவும், அதை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவர் காலமாகி உள்ளார்.2023ம் ஆண்டு அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்றார். வெகுவாக உடல் எடை குறைந்து பிறகு மீண்டார். மீண்டும் படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் , சிம்பு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மனைவி பிரியங்காவும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். மகள் இந்திரஜா பிகில் படத்தில் விஜய் உடன் நடித்துள்ளார்.ரோபோ சங்கர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார். அதற்கான பணிகள் நடந்து வந்தன. அதற்குள் அவர் காலமாகி உள்ளார். வரும் கமல்ஹாசன் பிறந்த நாளை தொடர் கொண்டாட்டமாக நடத்த இருந்தார். அதுவும் அவரின் நிறைவேறாத ஆசையாகி உள்ளது. ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை இறுதி சடங்கு நடக்கிறது.ரோபோ சங்கர் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசைசவுந்தரராஜன், மற்றும் மாநில பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் உளளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
செப் 19, 2025 11:36

பழைய தேன்மழை படத்து சோ, நாகேஷின் காமெடியை காலத்துக்கேற்ற மாதிரி மாற்றி செய்த அன்னைக்குக் காலையில ஆறு மணியிருக்கும். கோழி கொக்கரக்கோனு கூவுச்சு (வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம்) ஜோக் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஓம் சாந்தி.


Mr Krish Tamilnadu
செப் 19, 2025 10:58

நகைச்சுவை, காமெடி, ஜோக் - அனைத்துமே நியூட்டன் விதி போல், ஒரு சிரிப்புக்கு ஒரு வருத்தம் எங்கோ இருக்கும். பலர் சிரிக்கிறார்கள் என்றால், யாரோ ஒருவர் காயப்படுத்த பட்டு இருப்பார். அந்த காயத்தின் அளவு மாறும். ஆனால் ஒரு சிறு வருத்தமாவது யாரோ ஒருத்தருக்கு ஏற்படும், அதுவே நகைச்சுவை. நாகேஷ் போன்ற ஒரு சிலர் தான், அந்த வருத்தப்படுபவர், துன்பப்படுபவர் தனதாக்கிக் கொண்டு, பிறரை நோகடிக்காமல் காமெடி செய்தவர்கள். அந்த வரிசையில் தரமான காமெடி நடிகர் ரோபோ சங்கர். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தங்கள்.


எஸ் எஸ்
செப் 19, 2025 10:10

உடம்பை வளர்த்தோம் உயிர் வளர்த்தோம் என்ற மூதுரையை கடைபிடிக்க தவறி அகால மரணம் அடைந்து விட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி


Subramanian
செப் 19, 2025 08:12

ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


karthick pandian
செப் 19, 2025 07:52

அண்ணன், மிக நல்ல மிமிக்கிரி, காமெடி நடிகர், அவரது ஆன்மா, இறைவனிடம் சாந்தி அடைய வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு, எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்


பெரிய குத்தூசி
செப் 19, 2025 06:56

RIP


N.Purushothaman
செப் 19, 2025 06:31

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


Naga Subramanian
செப் 19, 2025 05:48

இந்த இயந்திர உலகத்தில், எந்திரன் பெயருடன் வலம் வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்த திரு.ரோபோ சங்கர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


Padmasridharan
செப் 19, 2025 05:37

சாமியோவ், மது அருந்தும் பழக்கமுள்ளவரா இவர்.


Kasimani Baskaran
செப் 19, 2025 04:04

பணம் சம்பாதிக்க ஓடியாடி உழைக்கும் பொழுதும் கூட நேரம் ஒதுக்கி உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இன்றியமையாதது. செல்வம் இருக்கும் பொழுது அதை அனுபவிக்க நல்ல உடல் வேண்டும். இல்லை என்றால் சம்பாதித்ததை மருத்துவர்கள் வாழ செலவிட வேண்டியிருக்கும். ஆழ்ந்த இரங்கல்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை