உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடிய கம்யூ., கவுன்சிலர்கள்; நூதன முறையில் எதிர்ப்பு

ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடிய கம்யூ., கவுன்சிலர்கள்; நூதன முறையில் எதிர்ப்பு

சென்னை: கால்பந்து மைதானத்தை தனியாருக்கு விடும் சென்னை மாநகராட்சியை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள், ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் இருக்கின்றன. மாநகராட்சிக்கான நிதி சுமையை குறைக்க நிலையான வருவாய் பகிர்வு அடிப்படையில் விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட உள்ளது. 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=djy1p7b4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த திடலில் பயிற்சி பெற, ஒரு மணி நேரத்திற்கு, 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு, 93.31 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். அதாவது மைதானத்தை பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆண்டுக்கு 2.3 கோடி கிடைக்கும்.

கம்யூ., எதிர்ப்பு!

மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் விமலா , ''கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்களை தனியாருக்கு வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், இலவசமாக அனுமதிக்க வேண்டும்,'' என்றார். இதற்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பதிலளிக்கையில், ''பராமரிப்பு செலவை ஈடு செய்வதற்காகவே, கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாடி வரும் வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்வதற்கு இலவசம்,'' என்றார்.

கால்பந்து விளையாட்டு

கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்பந்தம் விடுவதற்கும், அவற்றில், ஒரு மணி நேரத்திற்கு 120 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பெண் கவுன்சிலர்கள், ரிப்பன் மாளிகை கட்டடத்தில், கால்பந்து விளையாடி எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர்கள், பிரியதர்ஷினி, விமலா, சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, கால்பந்து விளையாடினர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வாபஸ்

சென்னையில் கால்பந்து மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sridhar
அக் 30, 2024 21:22

25 கோடிக்கு நீங்க காட்டும் நன்றியா இது...


Rpalnivelu
அக் 30, 2024 17:33

தனியார்மயம் நல்லதே


Barakat Ali
அக் 30, 2024 14:08

நல்லவேளை .... அம்மா அப்பா வெள்ளாட்டு வெள்ளாடல ....


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 30, 2024 11:46

கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு என்பதெல்லாம் உலக மகா நகைச்சுவை.


Sundar R
அக் 30, 2024 11:31

கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் பங்கு வாங்கி அமைச்சர்களாக இருந்தால், இதுபோன்று கால்பந்து ஆடும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது


V RAMASWAMY
அக் 30, 2024 11:25

இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தான் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கௌரவமும் கட்டுப்பாடும் ஒழுக்கங்களும் பொறுப்புகளுக்கேற்ற மரியாதைகளும் வரையின்றி கெட்டுப்போயிருக்கின்றன.


சம்பர
அக் 30, 2024 11:01

அடகுக்கு போன பொருள் மீட்கும் வரை உரிமை இல்லை


Mohammad ali
அக் 30, 2024 10:17

தமிழன் முதல்வர் ஆகாத வரையில் இது தொடரும்


hariharan
அக் 30, 2024 10:09

தனியாரிடம் விளையாட்டு மைதானங்களை ஒப்படைத்தல் நல்ல முடிவு. பாராமரிப்பு, தூய்மை கண்டிப்பாக தனியார் வசம் இருந்தால் மிக மிக நல்லது. எதெற்கெடுத்தாலும் இந்த வீணாய்ப்போன கம்யூனிஸ்ட்களுக்கு எதிர்ப்பு என சொல்வது மரபு. பாவம் அவர்களுக்கு தெரிந்தது இரண்டே. 1. எதிர்ப்பு 2. பிச்சையெடுப்பது அல்லது உண்டியல் குலுக்குவது. TVS, ராமன்


raja
அக் 30, 2024 10:06

ஆகா திருட்டு திராவிட விடியா மாடலின் 2026 தோல்வி மிக பிரகாசமாக தெரிகிறதே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை