மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் குழு வந்து நேரில் ஆய்வு செய்து, தமிழக அரசிடம் அ றிக்கை கேட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க., 'மணிப்பூர் கலவர உயிரிழப்புகள் தொடர்பாக விசாரித்து ஆய்வறிக்கை கொடுக்க எம்.பி.,க்கள் குழுவை பா.ஜ., அங்கே அனுப்பி வைக்காதது ஏன்?' என கேட்கின்றனர். கரூர் சம்பவம் வேறு; மணிப்பூர் சம்பவம் வேறு. இரண்டையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரச்னை. ஜாதிய பிரச்னை. மணிப்பூரில் நடந்த கொடூரத்திற்காக, நானே தலைகுனிந்து நிற்கிறேன். ஆனால், கரூரில் நடந்தது அரசியல் தாக்குதல். இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள் தனம். நடந்த சம்பவத்துக்கு விஜய் மன்னிப்புக் கேட்டுவிட்டார். சம்பவ இடத்திற்குச் செல்வதில் இருக்கும் சிக்கல்களையும் எடுத்துச் சொல்லிவிட்டார். 2 நிமிடத்தில் நுாடுல்ஸ் செய்வதைப் போல எல்லா த்துக்கும் உடனே தீர்வு சொல்லிவிட முடியாது. குஷ்பு துணைத் தலைவர் தமிழக பா.ஜ.,