உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் புகாரில் சிக்கினால் கருணை ஓய்வூதியம் நோ

ஊழல் புகாரில் சிக்கினால் கருணை ஓய்வூதியம் நோ

சென்னை:'ஊழல் குற்றச்சாட்டில், கூட்டுறவு சங்கத்திலிருந்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டோர், கருணை ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள்' என, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.கூட்டுறவு துறையின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பலருக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், அனைத்து வகை சங்க பணியாளர்களுக்கும், கருணை ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான விதிகளை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அனைத்து சங்க ஊழியர்களுக்கும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் விதிகள் பொருந்தும். ஓய்வு பெற்றவர்களுக்கு, கருணை ஓய்வூதியமாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சங்கத்தில் இருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டோர்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டோர்; பணியில் இருந்து தன்னிச்சையாக விலகியோர்; கிரிமினல் குற்றச்சாட்டில் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டோர், கருணை ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள்.இத்திட்டத்தை கண்காணிக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில், ஆறு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ