உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து மதத்தை விமர்சித்த இயக்குனர் ரஞ்சித் மீது புகார்

ஹிந்து மதத்தை விமர்சித்த இயக்குனர் ரஞ்சித் மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பாரத் ஹிந்து முன்னணி வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சினிமா இயக்குனர் ரஞ்சித் மீது, நேற்று ஒரு புகார் அளித்துள்ளார்.புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: இயக்குனர் ரஞ்சித் தனியார் யுடியூப் பேட்டியில், 'நான் படித்த பள்ளியின் எதிரில் ஒரு நந்தி இருக்கும். அந்த கல் மீது ஏறினால், வானத்து மேல் பறந்து விடலாம் எனக் கூறுவர். அதன் மேல் ஏறி நின்று பார்த்தேன்.வானத்தில் பறக்கிறேனோ, இல்லையோ முயற்சி செய்வேன். புத்தகம் மீது ஏறி நின்றால் படிப்பு வராது என்று கூறுவர்; நான் வேண்டுமென்று ஏறி உட்கார்ந்து பார்ப்பேன். சின்ன வயதில் அதை எல்லாம் செய்திருக்கிறேன்.அதேபோல் சாமி கல்லு மூன்று நட்டு வச்சிருப்பாங்க. அதுமேல ஏறி நின்னு இருக்கேன்' என, பேசிய வீடியோவை பார்த்து அதிர்ந்தேன்.உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள், நந்தி வடிவில் உள்ள ஈசனை வணங்கும் பக்தர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. படிப்பிற்கு தாயாக விளக்கும் சரஸ்வதி தேவியை, ஆண்டுதோறும் விஜயதசமியன்று, புத்தகங்களை வைத்து மக்கள் வணங்குகின்றனர்.கிராமங்களில் முனீஸ்வரன், பெண் தெய்வங்களை குலசாமியாக, மூன்று கல் வைத்து வணங்குகின்றனர். இதை இழிவுபடுத்தும் விதமாக இயக்குனர் ரஞ்சித், கேவலப்படுத்தி பேசி, ஹிந்துக்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்தி உள்ளார். ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து மத வெறுப்பு வீடியோவை யுடியூபில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Rathinam K
ஆக 31, 2024 17:30

இந்து மதத்துரோகி ஜெயிலில் போடணும்


Rathinam K
ஆக 31, 2024 17:29

இந்து மத துரோகியை ஜெயிலில் போட வேண்டும்


s sambath kumar
ஆக 13, 2024 14:55

ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அற்பப்பய. இவனெல்லாம் ஒரு டைரக்டர்.


Ganesun Iyer
ஆக 11, 2024 14:40

கடவுள்ன்னு இருந்தா இவனுக்கு கேன்சர் வந்து தல முடியெல்லாம் கொட்டி போயிடனும்... கடவுள்தான் இல்லையே அப்பறம் இது எங்க நடக்கும்..


karthikeyan
ஆக 12, 2024 17:10

உனக்கே தெரியுது கடவுள் இல்லையென்று அப்புறம் என்ன ஒரு தேவை இல்லாத பதிவு?


Subramaniam Mathivanan
ஆக 06, 2024 18:32

திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல், இந்து மதத்தை இழிவாக பேசியதற்கு பரிசு கொடுக்கும்


skv srinivasankrishnaveni
ஆக 08, 2024 09:24

திமுக தானே நடவடிக்கை தான் எடுப்பானுக சாமியே இல்லே சாமி கும்புடறவனெல்லாம் மடையன் என்று சொன்ன மாடசாம்பிராணிகளின் டிவொட்டீஸ்தானே இதுங்க எல்லாம், எல்லோரும் நெறையக்கொடிகள் கருப்பு பணமா சேர்த்துவச்சுண்டு மக்களை ஏமாற்றும் கூட்டம் என்று தெரிஞ்சும் சாராயத்துக்குத்தான் வோட்டு போட்டு ங்கேன்னு முழிக்கும் கூட்டம்


Ramani Venkatraman
ஆக 06, 2024 17:31

இப்படி பேசினால் அது கருத்து சுதந்திரம் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை கைல தூக்கிக்கிட்டு பத்து பேர் சட்டசபைல கத்தினால் உச்சநீதிமன்றம் வரை ஒன்றும் நடவாது.


சுந்தர்
ஆக 06, 2024 12:47

ரஜினிகாந்த் மாதிரி நடிகர்கள் இவர் மாதிரி ஆட்களை பிரபலப் படுத்துவது தான் பிரச்சனை. ரஜினிதான் குற்றவாளி.


V RAMASWAMY
ஆக 06, 2024 11:31

இவர் மீதும் உடனடி வழக்கு போட்டு, கைது செய்து, தக்க தண்டனை அளிக்கவேண்டும்.


RAAJ68
ஆக 06, 2024 11:08

இவன் தானே சொன்னான் ... என்பவனை ... விரும்புகிறார்கள் என்று. மாதர் குலம் ஏன் பொங்கி எழவில்லை? ஒரு மசூதியின் சமாதியில் இவனால் ஏறி நிற்க முடியுமா. காலை வெட்டி விடுவார்கள்.


xyzabc
ஆக 06, 2024 11:07

மட்டமான fellow.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை