உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., மாவட்டம் மீது புகார்; நிர்வாகிக்கு மேடையில் அடி உதை; படம் எடுத்த நிருபருக்கு மிரட்டல்

தி.மு.க., மாவட்டம் மீது புகார்; நிர்வாகிக்கு மேடையில் அடி உதை; படம் எடுத்த நிருபருக்கு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் மீது புகார் கூறியவரை, கட்சியினர் அடித்து உதைத்தனர். அதை படம் எடுத்த தினமலர் நிருபருக்கு மிரட்டல் விடுத்து படங்களை அழிக்க வைத்தனர்.கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தி.மு.க., செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார்.கூட்டத்தில், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கவுன்சிலரும், இளைஞரணி முன்னாள் நிர்வாகியுமான, வைரம் செந்தில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும் படி கோரினார். ஆனால் வாய்ப்பு தரப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m2o8esap&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது ஒரு பிரிவினர் திருச்சி சிவாவுக்கு ஆட்டுக்குட்டி பரிசாக கொடுத்தனர். அப்போது திருச்சி சிவாவை சுற்றி நிர்வாகிகள் அனைவரும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது திடீரென மேடை ஏறிய பேரூராட்சி கவுன்சிலர் வைரம் செந்தில் பேசுகையில், ''மாவட்ட செயலாளர் ரவிக்கும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் இடையே தொடர்பு உள்ளது. இருவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் உள்ளது,'' என்றார்.இதனால் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் செந்திலின் தோள் பட்டையில் மேடையிலேயே தாக்கினர். அவரை மேடையில் இருந்து கீழே இழுத்துச் சென்றனர். மண்டபத்தை ஒட்டி உள்ள பகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். ரவி தரப்பினருக்கும், செல்வம் தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இவை அனைத்தும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான திருச்சி சிவா முன்னிலையில் நடந்தன. கடைசியில் பேசிய அவர், ' நாடாளுமன்றத்தில் தி.மு.க.,வுக்கு அந்தஸ்து கிடைக்க காரணமானவர்களின் நானும் ஒருவன். தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அண்ணாதுரை பேசும்போது, எங்களிடம் உள்ளது காலிகளின் கூட்டம் என்று காமராஜர் கூறுகிறார். ஆனால் காலிகளின் கூட்டம் அல்ல, கட்டுப்பாடு உள்ள வீரர்களின் கூட்டம்.''அதே போல் இங்கு புகார் கூறிய நிர்வாகியின் ஆதங்கம் புரிகிறது. பொறுத்திருக்க வேண்டும். புகார் இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். பொது மேடையில் பேசக்கூடாது. நானே 20 ஆண்டுகள் காத்திருந்த பிறகுதான் பொறுப்பு பெற்றேன். எனவே காத்திருந்தால் நிச்சயம் பொறுப்பு கிடைக்கும்,' என்றார் .புகார் கூறிய செந்திலை ஒரு தரப்பு தி.மு.க.,வினர் சூழ்ந்து கொண்டு தாக்கியதை நமது நிருபர் போட்டோ எடுத்தார். இதையடுத்து நிர்வாகிகள் சிலர், நிருபருக்கு மிரட்டல் விடுத்தனர். நிருபரிடம் இருந்த இரண்டு மொபைல்களையும் பறித்து, அதில் உள்ள தள்ளு முள்ளு போட்டோக்களை அழித்து விட்டு திரும்ப கொடுத்தனர். 'தகராறு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடக்கூடாது' என மிரட்டல் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

விஜய்
செப் 15, 2024 10:48

இப்ப பாருங்க தலைப்பில் பத்திரிக்கை நிருபர்களுக்குமிரட்டல் போடுகிறார்கள் தவிர தினமலர் பத்திரிகையாளர்கள் என்று போடவில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2024 22:15

இதன்மூலம் சகலரும் அறியவேண்டியது என்னவென்றால் இரு கழகங்களும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு .....


சமூக நல விரும்பி
செப் 14, 2024 21:43

2021 மே மாதம் திமுக விடியல் ஆட்சி அமைத்து பொது மக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனே குறை நிவாரணம் அளிக்க படும் என்று அறிவிப்பு கொடுத்தார்கள். கடமை தவறாதவர்களாக இருப்பார்கள் என்று எண்ணி எங்கள் பகுதி நாய் தொல்லை பற்றி சம்பந்தபட்ட அலுவலக அதிகாரியிடம் மனு கொடுத்தனர். கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடன் இன்னும் எங்கள் மனுவுக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.


தமிழ்வேள்
செப் 14, 2024 19:16

அடிதடி கத்திக்குத்து தாலியறுப்பு....பேரறிஞன் சொல்லி கட்டுமரம் பயிற்றுவித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைதான் போல...


D.Ambujavalli
செப் 14, 2024 18:29

கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் அரசியல்வாதிகளின் அகராதியிலிருந்து அகற்றப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது எழுத்து மூலம் தெரிவித்துவிட்டால் அப்படியே நடவடிக்கை எடுத்து விடுவார்களா ? பல தொண்டர்கள், உறுப்பினர்களின் குமுறலை இவர் கொட்டி விட்டார் ஐம்பது அறுபது வருஷமாகவே வெறும் கூட்டத்தில் வாழ்க போடும் தொண்டன் விரக்தியில் பேசுவதில் வியப்பென்ன ?


Anantharaman Srinivasan
செப் 14, 2024 18:14

அண்ணாதுரை காலத்திலேயே அரசியல் ஞானி காமராஜர் காலிகள் கூட்டம் தான் இதுவென்று அறிந்திருத்தார்.


INDIAN Kumar
செப் 14, 2024 17:20

இவருக்கும் நேருக்கும் உள்ள பிரச்சினை வெளிப்படை தான் ஆனலும் இருக்க வில்லியா பொழப்புக்காக புஷ்பாவின் கைகள் இவரின் கன்னத்தில் படிந்ததே அப்படிப்பட்ட உத்தமர் அல்லவா இவர் சொன்னால் கேட்டு கொள்ளுங்கள்.


INDIAN Kumar
செப் 14, 2024 17:16

எந்த அதிமுக அமைச்சர் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? கொடநாடு விவகாரம் என்ன வாயிற்று எதிர்க்கட்சி என்று ஓன்று செயல்படுகிறதா ??? இருவரும் ஒருவரே கொள்ளை அடிப்பதில் , மாற்றம் வேண்டும் அது நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் ஏமாற்றமாக இருக்க கூடாது.


INDIAN Kumar
செப் 14, 2024 17:12

இரண்டு கூட்டங்களும் கூட்டு, கொள்ளை அடிப்பதில் , மக்கள் மாறாதவரை மாற்றம் சாத்தியமல்ல


Anand
செப் 14, 2024 17:01

உண்மையை சொன்னால் உதை விழும்.


புதிய வீடியோ