உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிணற்றில் வேனுடன் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

கிணற்றில் வேனுடன் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் வேனுடன் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆறுதல் கூறினார்.சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் ரோட்டோர கிணற்றில் வேன் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மூன்று பேர் தப்பினர். இதில் இறந்தவர்களின் உடல்கள் நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது எம்.பி., கனிமொழி, திருநெல்வேலி கலெக்டர் சுகுமார், டீன் ரேவதி பாலன் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 19, 2025 04:40

தேர்தல் வந்து விட்டால் இந்த நாடக கோஷ்டியுடைய தொல்லை தாங்காது. ஏம்மா, நீங்கள் நடத்தும் டாஸ்மாக்கால் பலர் குடும்பம் அழிகிறதே தெரியுமா? தெரியாதா?