த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல்
அஜித்குமார் குடும்பத்தினருக்கு, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பாக 1 லட்சம் ரூபாய் நிதி உதவியை, அவரது கட்சியினர் நேற்று வழங்கினர். ஆறுதல் கூறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறுகையில், ''இச்சம்பவத்திற்கு காரணமான நிகிதாவை கைது செய்து விசாரிக்க வேண்டும்; நிகிதா சார்பாக போலீசாருக்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என தெரியப்படுத்த வேண்டும்; அஜித்குமார் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்,'' என்றார்.