மாமல்லபுரத்தில் மாநாடு: அன்புமணி பேட்டி
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்து, வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களுக்கும், மக்கள் தொகை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வட மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இம்மாவட்டங்கள் கல்வி, பொருளாதாரம், தனிநபர் வருமானம், மனித வளர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளன.இங்கு அதிகமாக வாழும் பட்டியலின மற்றும் வன்னியர் போன்ற பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாமல்லபுரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்