உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைவர் தேர்வில் குழப்பம் கையெழுத்து இயக்கத்துக்கு பா.ஜ.,வில் ஆர்வம் குறைவு

தலைவர் தேர்வில் குழப்பம் கையெழுத்து இயக்கத்துக்கு பா.ஜ.,வில் ஆர்வம் குறைவு

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் தேர்வில் நீடிக்கும் குழப்பத்தால், மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்க பணியில், அக்கட்சியினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், 'சம கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது. அடுத்த மாதம் வரை, ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று, ஜனாதிபதியிடம் வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு ஆதரவு இருப்பதை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க போவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ப, பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும் தினமும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மும்மொழி கல்வி கொள்கை அவசியம் குறித்து தெரிவித்து, கையெழுத்து வாங்கினர். இந்நிலையில், அ.தி.மு.க., கோரிக்கையை ஏற்று, தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கு அண்ணாமலைக்கு மாற்றாக, புதிய நபரை நியமிக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, அக்கட்சி தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 'தலைவர் போட்டியில் நான் இல்லை' என, அண்ணாமலையும் கூறியுள்ளார். எனவே, மாநில தலைவர் தேர்தல் தொடர்பான குழப்பம் நீடிப்பதால், மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து பெறும் பணியில், பா.ஜ.,வினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். கடந்த வாரம் வரை, 35 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை