உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முழுமையான நம்பிக்கை உள்ளது

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முழுமையான நம்பிக்கை உள்ளது

மானாமதுரை : ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முழுமையான நம்பிக்கை உள்ளது. அதை தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை,'' என, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.மானாமதுரை நகர் காங்.,அலுவலகத்தில் அவர் கூறியதாவது: எனக்கு தமிழக காங்., தலைவர் பதவி கிடைப்பது குறித்து அகில இந்திய தலைவர் கார்கே முடிவு செய்ய வேண்டும். தற்போது எங்கள் நோக்கம் வரும் லோக்சபா தேர்தலை மட்டுமே நோக்கியுள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து கட்சியில் சிலர் மாறுபட்ட கருத்துக்களை கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஹிந்தி கற்க வேண்டும் என்று கூறியது தவறு. தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி., பாலு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறியதை வரவேற்கிறேன். ஹிந்தி தெரியாதவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன்.தென் மாவட்ட வெள்ளத்தின் போது முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு இண்டியா கூட்டணி குறித்து பேச சென்றது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் முதல்வர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் உதயநிதி உங்க அப்பன் வீட்டு பணமா என எதுகை, மோனையுடன் பேசியது கொச்சையான வார்த்தை கிடையாது.மத்திய அரசிற்கு நாம் கட்டும் வரிப்பணத்தில் மத்திய அரசு நமக்கு ஈடான நிதியை தருகிறதா என கவனிக்க வேண்டும். வட மாநிலங்களுக்கு அவர்கள் கொடுக்கின்ற வரியை விட கூடுதலாக நிதி கொடுக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கேற்ப தென் மாநிலங்களுக்கு குறைவான நிதியை தருகின்றனர். அதைத்தான் உதயநிதி பேசியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க., காங்., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Victor Christopher
ஜன 03, 2024 10:52

நல்லது, வரவேகத்தக்கது, எதையாவது இரண்டு அல்லது மூன்று வோட்டிங் பூத்தைய் தேர்வு செய்து கிராஸ் செக் பண்ணி நிரூபிக்கவும் . மின்னணு + பல்லோட் ஒரே பூத்து


g.s,rajan
ஜன 01, 2024 20:16

உங்களை யார் இப்படி சொல்லச் சொன்னாங்க ...???


g.s,rajan
ஜன 01, 2024 18:49

அறிவியல் விஞ்ஞானம் ,தொழில் நுட்பம் வளர்ந்த பல மேலை நாடுகளில் கூட தேர்தல்களில் ஒட்டுச் சீட்டு முறைதான் பயன்படுத்தப்படுகிறது,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அவர்கள் நிச்சயம் பயன்படுத்துவது இல்லை,அவர்களுக்கு பயன்படுத்தத் தெரியாதா என்ன ...???தேர்தலில் ஒட்டு எண்ணிக்கையை எண்ணுவதில் காலதாமதம் ஏற்பட்டால் என்ன...???அதிகமான ஆட்களைப் பயன்படுத்தி விரைவில் எண்ணிவிடலாம் . தவறுகள் நடக்காமல் தடுக்க கண்காணிப்புக்கேமராவை பயன்படுத்தி அனைவரும் அனைவரையும் மிக எளிதாகக் கண்காணிக்கலாம் .


g.s,rajan
ஜன 01, 2024 18:43

எங்கப்பன் குதிருக்குள் இல்லை .....


lana
ஜன 01, 2024 17:32

முதலில் gst பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சமச்சீர் கல்வி படித்த வர்களை கேட்டு கொள்கிறேன். gst இல் ஒரு மாநிலத்தின் பங்கு எவ்வளவு என்பதை மத்திய அரசு முடிவெடுக்க முடியாது. அந்த மாநிலம் வெளி மாநிலங்களில் இருந்து எவ்வளவு கொள் முதல் purchase செய்து உள்ளது அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு விற்று உள்ளது என்பதை கொண்டே முடிவு செய்ய படுகிறது. இதற்கு igst செட்டில்மெண்ட் என்று பெயர். ஒரு மாநிலம் அதிகம் purchase செய்தால் அங்கு igst செட்டில்மெண்ட் அதிகம் இருக்கும். எனென்றால் அந்த வாங்கும் பொருள் ளுக்கு உள்ள வரி அவர்கள் க்கு சொந்தம் இதே concept தான் ஏற்றுமதி க்கும். அதனால்தான் பெரும் பாலும் ஏற்றுமதி க்கு வரி இருக்காது. எனென்றால் வாங்கும் மக்கள் கேட்பார்கள் உன் நாடு வளர நான் ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று. இது தான் gst concept உம். உள் மாநில விற்பனை மற்றும் வாங்குவது இல் மாநில அரசின் பங்கு நேரடியாக மாநில அரசின் கணக்கில் நேரடியாக RBI இல் செலுத்த படுகிறது. இது தெரியாமல் கம்பு சுற்ற வேண்டாம். மாநில அரசில் வணிக வரித்துறை தான் இன்று gst வசூல் செய்கிறார்கள்


NicoleThomson
ஜன 01, 2024 16:19

பணத்தை கொடுத்தால் இந்த எதுகை மோனை எல்லாவற்றையும் ரசிக்கலாம் , அரசு பணத்தை அரசு முத்திரையுடன் வழங்கட்டும் எதற்கு கட்சி சின்னம் போட்டு கொடுக்கிறார்


வீரா, கொங்கு மண்டலம், தமிழக ஒன்றியம்
ஜன 01, 2024 12:43

கொங்கு மண்டலம் செலுத்தும் வரி ஏன் உங்கள் புதுகோட்டை மாவட்டத்திற்கு தண்ட செலவு செய்யவேண்டும். காரைக்குடி கந்துவட்டி (அ) ஓட்டல் வணிகத்தில் அரசுக்கு கணக்கோ அல்லது வரிகளோ கிடைப்பதில்லை என்பது ஊரறிந்த சிதம்பர ரஹசியம்???????????? வந்துட்டார் காங்கரஸின் குண்டு கல்யாணம்????


வீரா, கொங்குமண்டலம் தமிழக ஒன்றியம்
ஜன 01, 2024 12:28

EVMல் தில்லுமுல்லு செய்ய முடியுமென்றால் 2019ல் அதிமுக- பாஜக கூட்டணி 40லும் ஜெயித்து 2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்தருக்க முடியுமே? 2014ல் தேர்தல் நடத்தியது மன்மோகன் சிங் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சி. EVM தில்லுமுல்லு காரணமாக பிஜேபி ஆட்சிக்கு வந்தது என்று மன்மோகன் கட்சி நினைத்தால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சர்தார்ஜி ஜோக்.


sridhar
ஜன 01, 2024 12:20

உதயநிதி பேசியதில் எதுகை மோனை எங்கே இருக்கிறது. ஒன்றும் தெரியாமல் உளறுகிறார்.


Suppan
ஜன 01, 2024 13:23

ஆக கார்த்திக்கு எதுகை மோனை பற்றி ஒன்றும் தெரியாது. வெளிநாடுகளில் படித்தவர். பாராளுமன்றத்தில் அங்கத்தினர். இவருக்கு ஜி எஸ் டி கவுன்சில் எப்படி வரி வருமானத்தைப்பங்கீடு செய்கின்றது என்று தெரியாதா? இல்லை அரசியல்தான் செய்கின்றாரா. இவர் EVM பற்றி திக்விஜய் சிங் என்ற ஆசாமிக்குப்பாடம் எடுக்கவேண்டும்.


GoK
ஜன 01, 2024 11:56

முதலில் எதுகை மோனைக்கு இலக்கணம் படித்து வாருங்கள். மின்னணு வாக்குப்பதிவு பற்றி உங்கள் கட்சிக்கு ஒரு கருத்தா பல கருத்துக்களோ இருக்கலாம் ஆனால் நாட்டின் உச்ச நீதி மன்றம் முடிவு செய்த பிறகு பேச்சு சுதந்திரம் இருப்பதால் மனதுக்கு வருவதையெல்லாம் மக்களிடம் உண்மை போல பேசுவது அடாவடித்தனம். உதயநிதிக்கு சரி அவன் பாட்டனுக்கும் சரி மனித நாகரீகம், பண்பாடு, நா அடக்கம் இவை என்றுமே இருந்ததில்லை. உலகிலுள்ள அனைத்து டெட்டோல் இவர்கள் வாயில் ஊற்றி கழுவினாலும், சொல்லும் பொருளும் பழுது பட்டே இருக்கும். நீங்கள் வரிகளுடன் சேர்ந்தால் மலம் தின்னும் இனத்துடன் சேர்ந்தவராவீர்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை